முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / Letter Puzzle | இந்த எழுத்து புதிரில் விடுபட்ட எழுத்தை சரியாக கண்டுபிடிங்க பார்ப்போம்

Letter Puzzle | இந்த எழுத்து புதிரில் விடுபட்ட எழுத்தை சரியாக கண்டுபிடிங்க பார்ப்போம்

எழுத்து புதிர்

எழுத்து புதிர்

எழுத்து புதிரோ எண் புதிரோ, எதுவாக இருந்தாலும் லாஜிக் தான் முக்கியம். அதைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

  • Last Updated :
  • Chennai, India

மக்கள் தங்கள் சிந்தனை திறனை மேம்படுத்திக்கொள்ள நிறைய வழிகள் உள்ளன . அதில் ஒரு வழி தான் புதிர்களை அவிழ்ப்பது. புதிர்களில் படப் புதிர், வார்த்தை விளையாட்டுகள், கணித புதிர்கள் என்று பல வகைகள் உண்டு. இதில் உள்ள அனைத்து புதிர்களுக்கும் உள்ள ஒரு பொதுவான விஷயம் லாஜிக். எந்த கஷ்டமான புதிராக இருந்தாலும் அதன் அடிப்படையில் ஒரே ஒரு லாஜிக் தான் ஒளிந்திருக்கும்.

அந்த லாஜிக் வைத்து புனையப்பட்டு தான் புதிர்கள் உருவாக்கப்படுகிறது. அந்த லாஜிக் என்னவென்று சிந்திக்கும்போது ஒரே நோக்கில் சிந்திக்காமல் பல்வேறு முறைகளில் சிந்திக்க பழகுவோம். அது தான் பரந்துபட்ட சிந்தனையை வரத்தும் வழியாக இருக்கும்.  ஒரு பிரச்சனை என்று எடுத்துக்கொண்டால், அதற்கு நிறைய தீர்வுக்கான வழிகள் இருக்கும். அதை யோசிக்க பழக இந்த பயிற்சியாக இருக்கும். உங்களுக்காக இன்று ஒரு எழுத்து புதிர் கொண்டு வந்துள்ளோம்.

இந்த புதிரில் விடுபட்ட எழுத்தை கண்டுபிடிக்க வேண்டும். அவ்வளவு தான். கட்டத்தில் உள்ள எழுத்துக்களின் தொடர்புகளை கண்டுபிடித்துவிட்டால் விடை எளிதாக கிடைத்துவிடும். கட்டங்களில் கிடைமட்டமாகவோ  செங்குத்தாகவோ உள்ள எழுத்துகள் எந்த அடிப்படையில் வரிசை படுத்தப்பட்டுள்ளன என்பதை கவனியுங்கள்.

இத்தனை நாட்களாக எண்களைக் கொண்டு புதிர்களை போட்டுவந்தோம். ஒரு மாறுதலுக்குக்காக இன்று எழுத்து புதிர் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தீர்க்க முயற்சி செய்யுங்கள். ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களையும் வரிசையாக எழுதி இந்த எழுத்துக்கள் என்ன அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை பாருங்கள்.

உங்களுக்கு இந்நேரம் விடை கிடைத்திருக்கும் என்று நம்புகிறோம். அப்படி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. லாஜிக்கை தெரிந்துகொண்டு மீண்டும் முயற்சி செய்து பாருங்க. இந்த எழுத்து வரிசையில் லாஜிக் ஒன்று தான், கிடைமட்டமாக இருக்கும் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் முதல் எழுத்துக்களை விட 3 எழுத்துக்கள் முந்தையதாக இருக்கும்.

அதாவது ஆங்கில எழுத்துக்களை வாரிதிசையாக எழுதி புதிரில் உள்ள முதல் எழுத்தான P  இந்த இடத்தை பாருங்க. அந்த எழுத்தில் இருந்து மூன்று எழுத்து முன்னால் பார்த்தால் M இருக்கும். இது தான் லாஜிக். M க்கு முன்னாள் இருக்கும் மூன்றாவது எண் J. இது தான் புதிரின் மூன்றாவது எழுத்து.

இதே போல அடுத்த வரிசையை கவனிப்போம்,

முதல் எழுத்து U. அதற்கு முன்னால் உள்ள மூன்றாவது எழுத்து R.

எழுத்து வரிசையில் R க்கு முன் உள்ள மூன்றாவது எழுத்து O. வரிசையில் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகள் சரியாக உள்ளது.

இதையும் முயற்சி செய்து பாருங்க: Math riddle| இந்த எழுத்து - கணித புதிரின் லாஜிக் கண்டுபிடித்து விடை சொல்லுங்க பார்ப்போம்!

இறுதியாக கேள்விக்கு வருவோம். கடைசி வரிசையில் உள்ள முதல் எழுத்து H. ஆங்கில எழுத்து வரிசையில் இதற்கு முன்னால் உள்ள மூன்றாவது எழுத்தைப் பார்த்தால் அது E என்பதைத் குறிக்கும்.  E க்கு முன்னால் மூன்றாவது எழுத்து B.

top videos

    B என்பதே சரியான பதில்.உங்களுக்கும் அதே விடை தான் கிடைத்திருக்கும் என்று நம்புகிறோம். புதிர்கள் எல்லாம் போட போட வந்துவிடும். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி. நாளை மற்றொரு கணக்கோடு சந்திப்போம் மக்களே…

    First published:

    Tags: Trending