ஒரு காலத்தில் ஒரு பயணம் புறப்படுகிறோம் என்றால் அதற்கான தயாரிப்பு மிகு சுவாரஸ்யமாக இருக்கும். பயண வழி, பயண நேரம், பயணத்திற்கு தேவையான பணம் மற்றும் பொருட்கள் ஆகியவற்றை மிக கவனமான திட்டமிட்டு, அதை சரிசெய்து கொண்டு நாம் பயணம் புறப்படுவோம். ஆனால் இப்போதெல்லாம் வெளிநாட்டு பயணங்கள் கூட சில மணி நேரங்களுக்கு முன்பு திட்டமிடப்படுகிறது. அதற்கு காரணம் தொழில் நுட்ப முன்னேற்றம். அதில் ஒன்று தான் ஜிபிஎஸ் எனப்படும் கூகுள் மேப் சிஸ்டம்.
அமெரிக்காவின் ஹவாய் தீவில் குடி போதையில் இருந்த பெண் ஒருவர் கூகுள் மேப்பை பார்த்தபடி காரை கடலுக்குள் ஓட்டிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ தான் இப்போது இணைய உலகின் பேசு பொருள். காரில் பயணித்த அவர், கூகுள் மேப்ஸ் மூலம் வாகனத்தை ஓட்டி வந்தார். அப்படி காரை ஓட்டிச் செல்லும் போது கார் திடீரென கடலுக்குள் பாய்ந்துள்ளது. கூகுள் மேப் சொன்ன ரூட்டில் தான் அவர் சென்றிருக்கிறார்.
அங்கு கடல் வந்தது எப்படி என்பது தான் தெரியவில்லை. கார் கடலுக்குள் பாய்வதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காரில் இருந்த இருவரையும் பத்திரமாக மீட்டனர். காருக்குள் இருந்த அந்தப் பெண்ணை மீட்கும் அவர் ஏதோ காரை பார்க் செய்து விட்டு வெளியே வருபவரைப் போல ஹாயாக வந்துள்ளார். அப்போது அவர் குடி போதையில் இருப்பது தெரியவந்தது.
View this post on Instagram
கடலில் தவறி விழுந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் காருடன் மீட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டவசமாக, கார் கடலில் கவிழ்வதற்குள் காரில் இருந்த சுற்றுலா பயணிகள் இருவரும் பாதுகாப்பாக கார் கண்ணாடி வழியாக இருந்து வெளியே மீட்கபட்டனர். இன்ஸ்டாகிராம் பயனர் கிறிஸ்டி ஹட்சின்சன் இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார். சம்பவம் நடந்தபோது அவர் அதே இடத்தில் இருந்ததாக கூறி உள்ளார்.
இந்த வீடியோவை ஏராளமானோர் பார்த்துவிட்டு கமெண்டுகளையும் பதிவு செய்து வருகிறார்கள். வெகு சிலர் தான் இந்த சம்பவத்திற்கு வருத்தம் .தெரிவித்துள்ளனர். பெரும்பாலோனோர் கிண்டலும் கேலியுமாகத் தான் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். கூகுள் மேப்பை நம்புங்கள். ஆனால் அருகில் இருக்கும் உள்ளூர் மனிதர்களை் மீதும் கொஞ்சம் நம்பிக்கை வையுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.