முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / இறந்த குடி நோயாளி குடும்பத்திடம் இருந்து வந்த அன்பு பரிசு... உருக்கமாக பதிவிட்ட மருத்துவர்...!

இறந்த குடி நோயாளி குடும்பத்திடம் இருந்து வந்த அன்பு பரிசு... உருக்கமாக பதிவிட்ட மருத்துவர்...!

பரிசு

பரிசு

இறந்த நோயாளியின் குடும்பத்தில் இருந்து வந்த அன்பு பரிசு குறித்து மருத்துவர் ஒருவர் தன் டிவிட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இறந்த நோயாளியின் குடும்பத்தில் இருந்து பல மாதங்கள் கழித்து வந்த அன்பு பரிசு குறித்து மருத்துவர் ஒருவர் தன் டிவிட்டர் கணக்கில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

சமூக ஊடகம் வந்தவுடன் மகிழ்ச்சியான அல்லது சோகமான நிகழ்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது சற்று எளிதாகிவிட்டது. சமீபத்தில் பல மாதங்கள் கழித்து தன் இறந்த நோயாளியின் குடும்பத்தில் இருந்து வந்த அன்புப் பரிசு குறித்து மருத்துவர் ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மருத்துவர்களின் வாழ்க்கை என்பது நெருக்கடிகளை சமாளிப்பது தான். எவ்வளவு தான் ஒரு உயிரைக் காப்பாற்ற அவர்கள் போராடினாலும், ஏதேனும் ஒரு இழப்பு இருக்கத் தான் செய்கிறது. அந்த வகையில், மருத்துவர் ஒருவர் பகிர்ந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில், பால் என்ற நோயாளி அவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.  அவரின் குடும்பத்தினர் அவருக்கு அன்பு பரிசை அவருக்கு அனுப்பியுள்ளனர்.

இது குறித்து பதிவிட்ட அவர், தங்கள் அன்பை வெளிப்படுத்த பாலின் குடும்பத்தினர் மூன்று லட்டுக்களை தனக்கு பரிசாகக் கொடுத்துள்ளனர் என்று கூறியுள்ளார். அதனைக் கண்டதும் அவருக்கு மறைந்த பாலின் நியாபகம் வந்து வருத்தம் அடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், “பாலின் மனைவி, குழந்தைகள் என ஆளுக்கு ஒரு லட்டு என்று மூன்று லட்டுக்கள் இருக்க, பாலின் நான்காவது லட்டு இல்லையே என்று அவர் உருக்கமாக அந்தப் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

அவர் பாலின் கதையை பின்வருமாறு தன் பதிவில் விவரித்து இருந்தார். என் நோயாளி பால், மது குடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியாமல் அவதிப்பட்டார். அவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடிப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு, அவருக்கு கல்லீரல் அழற்சி ஏற்பட்டது. மஞ்சள் காமாலை, இரத்த தொற்று என்று அவர் நிலை மோசமாகி அவர்  கல்லீரல் மாற்று சிகிச்சைக்காக எங்கள் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

பால் சிறு பொருட்கள் மற்றும் கேக் போன்றவை விற்பனை செய்யும் ஒரு சிறிய பேக்கரி கடை வைத்திருந்தார். இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தன. ஒரு குழந்தைக்கு 5 வயது, மற்றொரு குழந்தைக்கு 9 வயது. அவரது மனைவி பகுதி நேர வேலையில் ஈடுபட்டு இருந்தார். ஆனால், குழந்தைகள் பிறந்த பிறகு வேலையில் இருந்து விலகினார். அதனால், மாற்று அறுவை சிகிச்சைக்கு அவர்களிடம் போதுமான பணம் இல்லை.

அதனால் ஆன்டிபயோட்டிக்ஸ் கொண்டு நாங்கள் அவருக்கு சிகிச்சை அளித்தோம். ஆனால், அவர் சரியானதும் திரும்பவும் குடிக்க சென்று விடுகிறார் என்று தெரிய வந்தது. மீண்டும் அவருக்கு தீவிரமான கல்லீரல் அழற்சி ஏற்பட்டது. இந்த முறை அது சிறுநீரகத்தை பாதித்து தீவிரமாக இருந்தது. பணம் இல்லை என்பதால் அவர்கள் அவரை வீட்டில் வைத்தே சிகிச்சை அளித்தனர். தொலைபேசியில் அவர் மனைவியைத் தொடர்பு கொண்டு நான் தவறாமல் பாலுக்கு தேவையான மருந்துகளை பரிந்துரைத்தேன், அவரின் அறிகுறிகளைக் குறைப்பதற்கான பரிந்துரைகளையும் செய்தேன். குடும்பத்தாருக்கும் என்னால் முடிந்த வரை ஆறுதல் அளித்தேன்.

Also Read : விமான பயணத்தில் தெரிந்த நார்தர்ன் லைட்ஸ்.. துள்ளிக்குதித்த பெண்கள்.. இணையத்தில் பரவும் காட்சிகள்

ஆனால், அவர் வீட்டிலேயே இறந்தார். குடிப்பழக்கத்தால் ஒரு பெண் தன் கணவரை இழந்தார். அழகான இரு குழந்தைகள் தன் தந்தையை இழந்து உள்ளனர். மதுவை எப்பொழுதாவது கூட எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மருத்துவர் உருக்கமாக அதில் அறிவுரையும் தெரிவித்து இருந்தார். மதுவால் சிதைந்த பல குடும்பங்களைத் தான் கடந்து வந்துள்ளதாக அவர் பகிர்ந்துள்ள அந்தப் பதிவிற்கு பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

First published:

Tags: Doctor, Viral