முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ஃபுல் என்றால் ஏன் 1லி இல்லை.? மதுபானம் அளவுகளின் வரலாறு இதுதான்.. பலருக்கும் தெரியாத விஷயம்!

ஃபுல் என்றால் ஏன் 1லி இல்லை.? மதுபானம் அளவுகளின் வரலாறு இதுதான்.. பலருக்கும் தெரியாத விஷயம்!

மது பாட்டில் ஏன் லிட்டரில் விற்கப்படுவதில்லை? - இதுதான் காரணம்!!

மது பாட்டில் ஏன் லிட்டரில் விற்கப்படுவதில்லை? - இதுதான் காரணம்!!

Why wine bottle not in litre : மதுபானம் ஏன் 1000 மிலி அதாவது ஒரு லிட்டர் பாட்டிலில் விற்கப்படுவதில்லை? என எப்போதாவது நீங்க யோசித்தது உண்டா?

  • Last Updated :
  • Tamil Nadu, India

மது நாட்டுக்கும், வீட்டிற்கும் கேடு என்றாலும் இதை யாரும் அவ்வளவு எளிதில் கைவிடுவதில்லை. மதுபானம் என்பது உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பலகோடி மக்களால் விரும்பப்படும் பானம். உடலுக்கும் நம்மை சார்ந்து இருப்பவர்களுக்கும் கேடு என்றாலும் ஏதாவது ஒரு சாக்கு சொல்லி மதுக்குடிப்பவர்கள் இங்குண்டு.

இந்நிலையில், இன்று நாங்கள் உங்களுக்கு மது தொடர்பான ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்து கொள்ளப்போகிறோம். இந்த கேள்வி உங்கள் மனதிலும் இருந்திருக்கும். ஆனால், அதற்கான பதில் கிடைத்திருக்காது. மற்ற நீர் ஆதாரங்களை அளவிடும் முறையில், மதுபானங்களை அளவிடுவதில்லை. இது இந்தியாவில் மட்டும் அல்ல, உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் ஆல்கஹால் அளவிடும் முறை மிகவும் சுவாரஸ்யமானது.

மார்க்கெட்டில் கிடைக்கும் மதுபாட்டில்கள் குவாட்டர், ஹாஃப் அதாவது பாதி, கால் என்ற இரண்டு அளவுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஒரு முழு மதுபான பாட்டில் (Full) வெறும் 750 மில்லி மட்டும் தான். ஒரு ஹாஃப் 375 மில்லி, ஒரு குவாட்டரின் அளவு 180 மில்லியாகவும் கணக்கிடப்படுகிறது. இந்த அளவீடுகளில் தான் உலகம் முழுவதும் மதுபானம் அளவிடப்படுகிறது.

இருப்பினும், அமெரிக்காவில் மட்டும் 1 லிட்டர் அதாவது 1000 மிலி மற்றும் 500 மிலி யூனிட் மதுபாட்டில்கள் கிடைக்கின்றன. தண்ணீர், ஜூஸ், பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல் என அனைத்து திரவங்களையும் ஃபுல் என்றால் 1 லிட்டர் எனவும் ஹாஃப் (பாதி) என்றால் 500 மிலி என்றும் கால் என்றால் 250 மிலி என்றும் கணக்கிடுகிறோம். ஆனால், மதுவை மட்டும் வேறு விதமாக அளக்கும் வழக்கம் உள்ளது. இங்கே ஃபுல் என்பது வெறும் 750 மிலி மட்டுமே 1 லிட்டர் அல்ல.

இந்த முறை எங்கிருந்து வந்தது?

உண்மையை கூறினால், இந்தியா நீண்ட காலமாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த நாடு. இதனாலேயே, நமது நாட்டில் இன்னும் பல விஷயங்களில் பிரிட்டிஷ் வழக்கங்களை பின்பற்றி வருகிறோம். அதில் ஒன்று, மதுபானத்தை அளவிடும் முறை. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்த போதே பல நாடுகள் இந்த முறையை ஏற்றுக்கொண்டது.

Also Read | தோண்ட தோண்ட எலும்புகூடுடன் வந்த தங்க நகைகள்… அதிர்ந்து போன ஆராய்ச்சியாளர்கள்!!

இதற்குப் பின்னால் ஒரு பெரிய லாஜிக் உள்ளது. Quora இணையதளத்தில் ஒரு பயனர் இதைப் பற்றி ஒரு நீண்ட இடுகையை பதிவிட்டுள்ளார். அந்த பேட்டனின் படி, ஒரு பெரிய பெக்கின் அளவு 60 மில்லி மற்றும் சிறிய பெக்கின் அளவு 30 மில்லி ஆகும். துவக்கத்தில் இந்த அளவீடுகளில் தான் பெரிய மற்றும் சிறிய பெக் (pegs) மதுக்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதே அளவீட்டின் கீழ், ஒரு பாவா (குவாட்டர்) 180 மி.லி என கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, மூன்று பெரிய அல்லது ஆறு சிறிய பெக் சேர்ந்தால் ஒரு குவாட்டர்.

top videos

    அதேபோல், ஒரு தூண் (ஃபுல்) என்றால் 750 மில்லி உடைய ஒரு முழு பாட்டில் மதுபானம். அதாவது 12 பெரிய பெக் மற்றும் ஒரு ஷார்ட் (ஸ்மால் பெக்) ஐ உள்ளடக்கியது. அதேபோல, ஒரு ஹாஃப் 375 மிலி பாட்டில் ஆகும். இதில், 6 பெரிய பேக் மற்றும் 15 மிலி மதுபானம் கூடுதலாக இருக்கும். ஆனால், இந்த 15 மில்லிக்கு பின்னால் வலுவான லாஜிக் ஒன்றும் இல்லை. ஏனென்றால், இது 750 மில்லி லிட்டரை பாதியாக பிரித்து கணக்கிடப்பட்டுள்ளது என தெரிகிறது. மதுபானம் பெரும்பாலும் பெக்குகளின் ஆவை கொண்டு அளக்கப்படுவதால் இவை, 750, 375 மற்றும் 180 என்ற அளவீட்டை கொண்டுள்ளனர்.

    First published:

    Tags: Alcohol, Viral News, Viral Video