சில வகையான காருக்கு உள்ளேயே ஃப்ரிட்ஜ் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை பெரும்பாலானவர்கள் கவனிப்பது இல்லை. அவற்றை எப்படி பயன்படுத்துவது என்று யூடியூபர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
சமூக வலைதளங்களில் பல வகையான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. மக்களின் அறிவை அதிகரிக்கச் செய்யும் பல வீடியோக்கள் இவற்றில் உள்ளன. குறிப்பாக லைஃப் ஹேக் வீடியோக்களை மக்கள் விரும்புகிறார்கள். இந்த ஹேக்குகளைப் பார்த்த பிறகு, மக்களும் அவற்றை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்த ஆரம்பிக்கின்றனர். இந்த நாட்களில் மக்கள் இதுபோன்ற வீடியோக்களை விரும்புகிறார்கள், அதில் பல வகையான ரகசியங்கள் மக்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில் காருக்குள் இருக்கும் ஃப்ரிட்ஜை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவில் இளம் பெண் கூறுவதாவது- 90 சதவீதம் பேருக்கு இதை எப்படி பயன்படுத்துவது என்பது தெரியாது.
View this post on Instagram
காருக்கு உள்ளேயே இந்த சிஸ்டம் இருக்கிறது. முதலில் ஏசியை ஆன் செய்து கொள்ள வேண்டும். டெம்பரேச்சரை குறைத்து விட்டு, வைண்ட் ஸ்பீடை மிடிலில் வைக்க வேண்டும். பின்னர் ஆர்ம்ஸ்ட் பாக்சை திறந்து பார்த்தால் அங்கு குளிர்ந்த காற்று வருவதை பார்க்கலாம். அங்கிருக்கும் பட்டனை க்ளாக் வைசில் சுற்றும்போது, பனி சிம்பல் வரும்.
அவ்வளவுதான் இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் அங்கு வைத்துள்ள தண்ணீர், பழச்சாறு உள்ளிட்ட திரவ பொருட்கள் குளிர்ச்சி அடைய தொடங்கி விடும் இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆனால் இந்த வசதி அனைத்து கார்களிலும் வருவதில்லை. சில குறிப்பிட்ட வகை கார்களில் மட்டுமே வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending Videos