கென்யாவில் கடற்கரை நகரமான மலிண்டியில் கடவுளின் பெயரைச் சொல்லி ஒரு மத போதகர் மக்களை உயிரிழக்கச் செய்யும் பாதகத்தை செய்து வருகிறார். அவருடைய போலி பிரசங்கத்தை நம்பி இதுவரை உயிரிழந்த 73 பேர்களின் சடலங்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டினி கிடந்து இறைவனை வழிபட்டால் மோட்சத்திற்கு செல்லலாம் என டெக்கன்சி நத்தாங்கே என்ற மத போதகர் பிரசங்கம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவரது பேச்சை நம்பி ஏராளமான மக்கள் பட்டினி வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழிபாட்டின் விபரீதம் புரியாமல் நாட்கணக்கில் பட்டின கிடந்ததால் பலரும் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து குட் நியூஸ் இன்டர்நேசனல் சர்ச் என்ற அமைப்பைச் சேர்ந்த மெக்கன்சியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற உள்ளது. ஆனாலும், அவரின் பேச்சை நம்பி மலிண்டி நகரில் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் சகாஹோலா என்ற வனப்பகுதியில் மெக்கன்சியின் ஆதரவாளர்கள் தலைமறைவாக இருந்து தொடர்ந்து பட்டினி வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதையடுத்து அந்த வனப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது வனப்பகுதிக்குள் கொத்துக் கொத்தாக பிணங்கள் கிடந்துள்ளன. அப்படி இதுவரை 73 பேர்களின் சடலங்களை போலீசார் மீட்டுள்ளனர்.
Read More : தள்ளுபடி சேலைக்காக தலைமுடியை இழுத்து அடித்துக்கொண்ட பெண்கள்... வைரல் வீடியோ!
சகாஹோலா கட்டுப்பகுதிக்குள் கூட்டம் கூட்டமாக தலைமறைவாக இருந்து இது போன்ற கண்மூடித்தனமான வழிபாட்டில் ஈடுபடுபவர்களை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மதத்தின் பெயரைப் பயன்படுத்தி இது போன்ற மக்கள் விரோத செயல்கள் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறியுள்ளார் அந்நாட்டு அதிபர் வில்லியம் ரவுட்டோ.
சகாஹோலா வனப்பகுதிக்குள் போலீசார் தீவிர சோதனை நடத்திய போது பட்டினி கிடந்து குற்றுயிராக கிடந்த இளைஞர் ஒருவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வனப்பகுதி முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.