பொதுவெளியில் முகம் சுழிக்கும் விதமாக இளசுகள் செய்யும் சேட்டை சம்பவங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அத்தகைய சம்பவம் ஒன்று டெல்லி மெட்ரோ ரயிலுக்கு நிகழ்ந்துள்ளது. காதலுக்கு தான் கண்ணில்லை சுற்றி இருக்கும் எங்கள் கண் இல்லையா என்று கேட்கும் விதத்தில் இளம் ஜோடிகள் டெல்லி ப்ளூ லைன் மெட்ரோவில் நடந்துள்ளனர். வைராலன வீடியோவில் ஆட்கள் நிறைந்த மெட்ரோ ரயில் ஒன்றில் இளம் ஜோடி பயணிகிறது.
அந்த இளைஞரின் மடியில் இளம் பெண் சாய்ந்து ஒய்யாரமாக படுத்துக்கொண்டார். அமர்ந்திருக்கும் இளைஞரின் முகத்தை நோக்கி பார்த்திருக்கும் படி பெண் மடியில் சாய்ந்திருக்கார். அந்த இளம் பெண்ணை கையால் அணைத்த படி, முகத்திலும் உதட்டிலும் இளைஞர் முத்தம் கொடுக்கிறார். இந்த ரொமான்ஸ் சம்பவம் அனைத்தையும் எதிரே இருக்கும் நபர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் இந்த வீடியோ இணையத்தில் பதிவேற்றப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலுக்குள் அனைவரின் முன்னிலையில் இளசுகள் செய்த இந்த சேட்டைக்கு இணையத்தில் கடும் கண்டக்குரல்கள் ஒலித்து வருகின்றன.
இது என்ன டெல்லி மெட்ரோவின் பெயரை P0rnHub மாற்றிவிட்டார்களா, ஏன் அங்கு இருப்பவர்கள் யாரும் ஜோடியை தட்டிக்கேட்கவில்லை, பெண்ணுக்கு என்ன மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதா இளைஞர் CPR சிகிச்சை தருகிறார் போல என்று விதவிதமாக கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: உறவுக்கார பெண் திருமணத்தில் ஜாலி ஆட்டம் போட்ட பொறியாளர்... மேடையிலேயே திடீர் மரணம்.. அதிர்ச்சி வீடியோ
இந்நிலையில், சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ள டெல்லி மெட்ரோ நிர்வாகம் பயணிகள் இது போன்ற ஒழுங்கிணத்தை கண்டால் நிர்வாகத்திடம் உடனடியாக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளது. மேலும், பயணிகள் பொது இடத்தில் கண்ணியம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Couples, Delhi, Metro Rail, Metro Train, Viral Video