முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / பொய் சொல்லி விடுமுறை எடுத்த ஊழியர்.. ரூ.73 லட்சம் இழப்பீடு கேட்கும் நிறுவனம்.. சீனாவில் நடந்த சட்டப்போராட்டம்!

பொய் சொல்லி விடுமுறை எடுத்த ஊழியர்.. ரூ.73 லட்சம் இழப்பீடு கேட்கும் நிறுவனம்.. சீனாவில் நடந்த சட்டப்போராட்டம்!

விடுமுறை

விடுமுறை

1998 முதல் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சூ, இரண்டு வார ஊதிய விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளார். அது மறுக்கப்படவே அவர் புது பொய்யை கூறியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சீன தொழில்நுட்ப நிறுவன ஊழியர் ஒருவர் தனது விடுமுறையை தவறாக பயன்படுத்தி சிக்கியதால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜு (Xu) என மட்டுமே அடையாளம் காணப்பட்ட அந்த நபர், தனது நிறுவனத்தின் முதலாளியின் இந்த செயலை எதிர்த்துப் போராடி உள்ளார். இது குறித்து பெய்ஜிங் மூன்றாவது இடைநிலை மக்கள் நீதிமன்றத்தில் இவர் வழக்கு போட்டுள்ளார். ஆனால், இந்த ஆண்டு ஏப்ரலில், அந்த வழக்கு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. எனவே, ஜு இதற்காக 620,000 சீன யுவானை (சுமார் ரூ. 73 லட்சம்) இழப்பீட்டாக தர வேண்டும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. 

பிசினஸ் இன்சைடரின் கூற்றுப்படி, ஜூலை 2019 இல் இந்த பிரச்னை தொடங்கி உள்ளது.  1998 முதல் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சூ, இரண்டு வார ஊதிய விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளார்.  ஆனால் அவருக்கு லீட் கொடுக்கப்படவில்லை.

அதனால், ஜூலை 18 முதல் ஜூலை 31 வரை உடல்நிலை சரியில்லை என விடுமுறை கோரியுள்ளார். அத்துடன் தலைச்சுற்றல் மற்றும் சில உடல்நிலை பாதிப்பு உள்ளது என கூறி மருத்துவ ஆதாரங்களை வழங்கியும் உள்ளார். அவர் சமர்ப்பித்த மருத்துவ ஆவணத்தில் "படுக்கை ஓய்வு மற்றும் கழுத்து பயிற்சிகள்" என்று மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட குறிப்பு இருந்துள்ளது. அதன் அடிப்படையில் இவருக்கு விடுமுறை அங்கீகரிக்கப்பட்டது. பின்னர் சம்மர் வெகேஷன் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு தனது குழந்தையுடன் சுற்றுலா சென்றுள்ளார். அந்த தருணத்தில் அவரது சக நிறுவன ஊழியர் ஒருவர் இவரை பார்த்துள்ளார். எனவே, உடனே அவர் ஹைனான் விமான நிலையத்தில் அவரைக் கண்டறிந்து அவரது விடுமுறையை அவர் தவறாகப் பயன்படுத்தியதை குறித்து தனது நிறுவனத்திடம் புகாரளித்துள்ளார்.

Read More : பழங்கால சிலையின் கையில் லேப்டாப்?! டைம் ட்ராவல் கதை.. இணையத்தில் விவாதமான பெண்ணின் சிலை!

ஆகஸ்ட் 21 அன்று அவர் இருக்கும் இடத்தை உறுதிப்படுத்த அவரது மேலாளர் அழைத்தபோது, ​​அவர் பயணம் செய்யவில்லை என்றும் அதற்குப் பதிலாக சீனாவின் தலைநகரில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுப்பதாகவும் கூறியுள்ளார். இருப்பினும், தொழில்நுட்ப பணியாளர் "மோசடி மற்றும் நேர்மையின்மை" ஆகியவற்றின் அடிப்படையில் அவரது வேலையில் இருந்து நீக்கப்பட்டதாக மெயில் வந்துள்ளது. இந்த புள்ளியில் இருந்து தான் பிரச்சினை தொடங்கியுள்ளது. ஒரு தொழிலாளர் தீர்ப்பாயம், ஜு-வின் முதலாளி தொழிலாளர் சட்டங்களை மீறியதாகக் கண்டறிந்து, அவருக்கு ரூ. 73 லட்சம் ஊதியம் வழங்க உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தது.

top videos

    அதன் பிறகு, அந்த நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அதை ரத்து செய்தது. அவர் தனது நிறுவனத்தை ஏமாற்றவில்லை என்பதை நிரூபிப்பதற்கான எதிர் முறையீட்டில், ஜு தனக்கு ஹைனானில் ஒரு பிளாட் இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக விமானம் மற்றும் அதிவேக இரயில் வழியாக தீவுக்குச் சென்று வந்ததாகவும் கூறியுள்ளார். இருப்பினும், மாவட்ட நீதிமன்றம் அவரை பணிநீக்கம் செய்வதற்கான முடிவை உறுதி செய்ததால், படுக்கை ஓய்வு குறித்த மருத்துவரின் ஆலோசனையை அவர் பின்பற்றவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

    First published:

    Tags: Trending, Viral