முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / 87 மணிநேரத்தில் 110 உணவு வகைகள்..! உலக சாதனை படைத்த பெண் சமையல் கலைஞர்..

87 மணிநேரத்தில் 110 உணவு வகைகள்..! உலக சாதனை படைத்த பெண் சமையல் கலைஞர்..

சமையல் கலைஞரான ஹில்டா பாசி

சமையல் கலைஞரான ஹில்டா பாசி

27 வயதான ஹில்டா பாசி இந்த போட்டியில் சமைக்க தொடங்கியபோது விருந்தினர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் மற்றும் பிற பார்வையாளர்களால் ஆன்லைனில் உற்சாகப்படுத்தப்பட்டார். பலரும் இவரது இந்த முயற்சி நிச்சயம் வெற்றிப்பெறும் என்று வாழ்த்தி கமெண்ட்ஸ் செய்துள்ளனர்

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்று யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் சமையல் குறித்த வீடியோக்கள் தான் அதிக அளவில் உலா வருகிறது. அதே போன்று, சமையல் துறையில் ஏராளமான நபர்களும் சாதித்து வருகின்றனர். இந்த திறமைமிக்க துறையில் பலர் பணியாற்றி வந்தாலும், ஒரு சிலர் மட்டும் தான் எண்ணற்ற சாதனைகளை செய்து வருகின்றனர். சமையல் துறையை பொறுத்தவரையில், சரியான முறையில் செயல்பட, படைப்பாற்றல் மற்றும் பயிற்சி இரண்டும் தேவைப்படுகிறது. இப்படியொரு திறன்மிக்க பெண்மணி தான், தற்போது மிக பெரிய சாதனை ஒன்றை செய்துள்ளார்.

பொதுவாக வீடுகளில் 2-3 மணி நேரத்திற்கு மேல் சமையல் வேலைகள் இருக்கும். சில சமயங்களில், அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு சமைப்பது என்பது வேறுபட்ட முறையாகும். அதற்கான அளவுகோல் முதல் செயல்பாடு வரை மாறுபடும். சமையலறையில் பல மணிநேரம் பல உணவுகளைத் தயாரிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் ஒரு நபர் 90 மணிநேரம் இடைவிடாமல் சமைப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா..?

ஆம், 27 வயதான நைஜீரிய சமையல் கலைஞரான ஹில்டா பாசி என்பவர் சுமார் 87 மணி நேரம் 46 நிமிடங்கள் வரை சமைத்து புதிய உலக சாதனை படைக்கவுள்ளார். இவரின் இந்த மராத்தான் சமையல் என்பது 2019-இல் கின்னஸ் சாதனை படைத்த இந்திய சமையல் கலைஞர் லதா டோண்டோவின் சாதனையை முறியடித்துள்ளது.

Read More : உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம்… விலை எவ்வளவு தெரியுமா?

27 வயதான ஹில்டா பாசி இந்த போட்டியில் சமைக்க தொடங்கியபோது விருந்தினர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் மற்றும் பிற பார்வையாளர்களால் ஆன்லைனில் உற்சாகப்படுத்தப்பட்டார். பலரும் இவரது இந்த முயற்சி நிச்சயம் வெற்றிப்பெறும் என்று வாழ்த்தி கமெண்ட்ஸ் செய்துள்ளனர். இந்த போட்டி நைஜீரியாவில் உள்ள லாகோஸ் மாநிலத்தில் உள்ள லெக்கி என்ற இடத்தில் நடைபெற்றது.ஹில்டா பாசி மே 11 அன்று மாலை 4 மணிக்கு இந்த மராத்தான் சமையலை தொடங்கி, திங்கட்கிழமை காலை 7:46 மணிக்கு முடித்துள்ளார்.


இதன் முடிவில், அவர் மொத்தம் 110 உணவுகளை சமைத்து அசத்தியுள்ளார். இந்த போட்டியில் இவர் பெரும்பாலும் நைஜீரிய வகை உணவுகளை சமைத்ததாக கூறிப்படுகிறது.  இந்த மாரத்தான் சமையல் போட்டி குறித்து தனது இன்ஸ்டாவில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். அதில், "என் அன்பானவர்களே, இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன், இது  ஒரு பெரிய முயற்சி, உங்கள் ஆதரவு நிச்சயமாக எனக்கு உதவும் என்று நம்புகிறேன். வரும் ஏப்ரல் 28 முதல் மே 1 வரை ஆம் தேதி தனி நபராக அதிக நேரம் சமைத்து கின்னஸ் உலக சாதனையை முயற்சிக்க உள்ளேன்.இதற்காக 5 ஆண்டுகளாக தயாராகி வருகின்றேன்.

top videos

    இந்த சவாலுக்காக நான் 20 கிலோவுக்கும் மேல் எடையை குறைத்தும் எனது வாழ்க்கை முறையை மாற்றியும் உள்ளேன். கடவுளின் உதவியால் நிச்சயம் இந்த போட்டியில் நான் வெற்றி பெறுவேன். இது எனக்கு மட்டும் வெற்றியாக இருக்காது, இது ஆப்பிரிக்காவில் உள்ள அனைத்து பெண்களுக்கும் கிடைத்த வெற்றியாக இருக்கும்." என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

    First published:

    Tags: Guinness, Trending, Viral