பருவம் எய்திய பின்னர் ஆண்களுக்கு அரும்பு மீசை வளரும். வயது முதிர்ச்சி அடைய அடைய மீசை தாடியின் அடர்த்தியும் கூடும். வயதாகும்போது நிறம் மாறி சாம்பல்- வெள்ளை என்று மாறும். கூடுதலாக வளர்ந்தால் வெட்டிவிட்டு போவார்கள். ஆனால் இப்போது ரக்கெட் பாய் லுக் (rugged boy look) என்ற பெயரில் அடர்த்தியாக தாடி வளர்ப்பது ஒரு பேஷனாக மாறிவிட்டது.
அது போதாதென்று தாடியை வளர்த்துவதற்கும் பராமரிப்பதற்கும் தனியாக அழகுசாதன பொருட்களும் சந்தையில் அதிகம் விற்பனை ஆகி வருகிறது. இந்நிலையில் கனடாவில் வாழும் சீக்கியர் ஒருவர் 8 அடிக்கு தாடியை வளர்த்து உலகின் மிகப்பெரிய தாடி உடைய வாழும் மனிதர் என்ற தனது முந்தைய சாதனையை உடைத்து புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
கனடாவில் வாழ்ந்து வரும் சர்வான் சிங் தனது 17 ஆவது வயதில் இருந்து தாடியை வளர்த்து வருகிறார். அதை முழுவதும் வெட்டாமல் பராமரித்து மட்டும் வருகிறார். கின்னஸ் உலக சாதனையின் படி, கனடிய சீக்கியர் ஆரம்பத்தில் 2008 ஆம் ஆண்டில் தனது தாடியை அளந்தார், அது 2.33 மீ (7 அடி 8 அங்குலம்) நீளமாக இருந்தது.
2008 க்கு முன் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பிர்கர் பெல்லாஸ் என்பவர் வைத்திருந்த 1.77 மீ (5 அடி 9 அங்குலம்) நீளமான தாடி என்ற முந்தைய சாதனையை சர்வான் சிங் அப்போது முறியடித்தார். அதன் பின்பும் தனது தாடியை நீளமாகி வளர்த்து வந்துள்ளார்.
அதன்பின்னர் 2010 இல் இத்தாலியின் ரோமில் உள்ள லோ ஷோ டீ ரெக்கார்ட் ( Lo Show dei Record) என்ற சதை தொகுப்பில் இடம் பெற சர்வான் தனது தாடியை மீண்டும் அளந்தார். அப்போது அவரது தாடி 2.495 மீ (8 அடி 2.5 அங்குலம்) நீளமாக இருந்துள்ளது. அதுவும் இத்தாலிய சாதனை பட்டியலில் பதிவு செய்யப்பட்டது.
அதன் பின்னர் சமீபத்தில் அக்டோபர் 15, 2022 அன்று மறுஅளவீடு செய்தபோது, அது இன்னும் அதிகமாகி 8 அடி 3 இன்ச் நீள தாடியாகிவிட்டது. இந்த நாட்களில் இது கொஞ்சம் சாம்பல் நிறமாக இருக்கிறது. ஆனால் முன்னெப்போதையும் விட அற்புதமான தன்மையும் திகழ்வதாக சர்வான் கூறுகிறார். சர்வான் தனது தாடியை கடவுள் கொடுத்த வரமாக கருதுகிறார்.
"இது ஒரு சீக்கியராக இருப்பதற்கான மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது," என்று அவர் கூறினார். மேலும் சுருள்கள் அளவீட்டின் நீளத்தை மாற்றாமல் இருக்க, அளவிடும் முன் முடி இயற்கையாகவும் ஈரமாக்கி அளவீடுகள் எடுக்கப்பட்டு தற்போது கின்னஸ் சாதனை சான்றிதழ் சேர்வான் சிங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Guinness, World record