முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / படத்தில் மறைந்திருக்கும் பூனையை கண்டுபிடிக்க முடியுமா? பலரையும் குழப்பிய புகைப்படம்!

படத்தில் மறைந்திருக்கும் பூனையை கண்டுபிடிக்க முடியுமா? பலரையும் குழப்பிய புகைப்படம்!

பூனையை கண்டுபிடிங்க

பூனையை கண்டுபிடிங்க

optical illusion: இந்த மரக்குவியல்களில் மறைந்திருக்கும் பூனையை கண்டுப்பிடிக்க முடியுமா?

  • Last Updated :
  • Tamil Nadu, India

புதிர்கள், மைண்ட் கேம்கள் மற்றும் சுடோகு போன்றவற்றைத் தீர்ப்பதில் உள்ள சுவாரஸ்யங்களை விட ஆப்டிக்கல் இல்யூஷன்கள் மூளைக்கு சிறந்த சவாலாக உள்ளன. சமீப நாட்களாக ஆப்டிக்கல் இல்யூஷன் புதிர்கள் இணையத்திலும் வைரலாகி வருகின்றன.

சில வகை ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியங்கள் அதனுள் மறைந்திருக்கும் ரகசியத்தை தேடி கண்டுபிடிக்க உங்களை தூண்டும் புதிர் விளையாட்டு போல் இருக்கும். சில புகைப்படங்கள் நம் கண்களை ஏமாற்றவும் கூடும். அப்படிப்பட்ட ஓவியம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சந்தன நிறத்தில் மரக் குவியல்களில் ஒரு பூனை தூங்கிக் கொண்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. உங்களுக்கு சவால் விடும் வகையில் இது ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படமாக உள்ளது. உங்கள் பார்வையில் இருந்து எதுவும் தப்ப முடியாது என்று நினைத்தால், பின்வரும் புகைப்படத்தில் பூனை எங்கு தூங்குகிறது என்பதை உதவிக் குறிப்பில்லாமல் கண்டுபிடிக்க முடியுமா என்று பாருங்கள்.

Road trip | தெலுங்கானாவில் உள்ள 8 மிக அழகான சாலைகளின் பட்டியல்!

இதுவரை முயன்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கான டிப்ஸ். பூனையின் கண்களை அடையாளமாக வைத்து தேட வேண்டாம்.

இப்போதும் உங்கள் கண்களுக்கு பூனை எங்கிருக்கிறது என்று தெரியவில்லை என்றால், இரண்டாவது டிப்ஸ். பூனை அடுக்கி வைத்த மரக்கட்டைகளின் மேல் வரிசையில் எங்கிருக்கிறது என்று பாருங்கள்.

பலரும் பூனை எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்காத சூழலில், இதை ஒரு போலியான இல்யூஷன் என்று கூறி வந்தனர். ஆனால், பூனை இருக்கும் இடம் குறிக்கப்பட்டு வெளியிடப்பட்டவுடன் தான் பலருக்கும் நம்பிக்கை வந்தது.

பூனை

top videos

    பலராலும் இந்த படத்தில் உள்ள பூனையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. இருப்பதிலேயே மிகவும் கடினமான ஆப்டிக்கல் இல்யூஷன் புதிராக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர். இது ஒரு பிரான்க் என்று நினைத்தேன் என்று ஒரு யூசர் தெரிவித்திருந்தார். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, சவாலில் தொற்று விட்டேன், பல நாட்கள் ஆனது, கண்களை படத்தில் இருந்து எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன், இப்போது மறக்க முடியவில்லை என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கமெண்ட் செய்து வந்தனர்.

    First published:

    Tags: Optical Illusion