ஒரு தொழில் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையேயான உறவு என்பது வெறும் பொருட்களை வாங்குவதிலோ அல்லது பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பதிலோ முடிந்து விடுவதில்லை. இதையும் தாண்டி ஒருவருக்கொருவர் நேர்மை மற்றும் மரியாதையோடு நடந்து கொள்ளும்போது, அவர்களுக்கு இடையே ஒரு அற்புதமான மற்றும் அழகான உறவு நிலைத்திருக்கும். இதை எவராலும் மறுக்க முடியாது.
ஒரு ஐரிஷ் கஃபே தனது வாடிக்கையாளரை பாராட்டும் பொருட்டு, ஒரு படி மேலே சென்று விட்டது என்று தான் கூற வேண்டும். அப்படி என்ன செய்தது என்று ஆச்சரியமாக உள்ளதா? அடிக்கடி தங்களது கஃபேவிற்கு வரும் சிறந்த மற்றும் ரெகுலர் கஸ்டமர் ஒருவரின் பெயரை அவர்கள் கஃபேவில் கிடைக்கும் ஒரு உணவுக்கு பெயர் சூட்டி உள்ளனர்.
இப்படி எல்லாம் படத்தில் தானே நடக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையாகவே இப்படி ஒரு சம்பவம் அயர்லாந்தில் நிகழ்ந்துள்ளது. அயர்லாந்தில் அமைந்துள்ள கிரான்கிகான் கிட்சன்
Grangecon Kitchen என்ற கஃபே ஒரு அற்புதமான வயதான வாடிக்கையாளர் ஒருவரைக் கொண்டுள்ளது. ஜான் என்ற அந்த நபர், தினமும் அந்த கஃபேவிற்கு வந்து ஹாஃப் பாயில் முட்டை, சாசேஜ்கள் மற்றும் ரோஸ்டட் வெஜிடபிள்ஸ் போன்றவற்றை தனது காலை உணவாக ஆர்டர் செய்து சாப்பிடுவது வழக்கம். அவர் வழக்கமாக ஆர்டர் செய்யும் அதே உணவுக்கு அவரது பெயரை சூட்டி, அதை மெனுவில் சேர்த்துள்ளனர்.
Read More : மேஜிக் ஷோவை சொதப்பிய தம்பி... கோபத்தில் அக்கா செய்த செயல்.. வைரல் வீடியோ!
அதன்படி அந்த உணவுக்கு "ஜான்'ஸ் பிரேக்ஃபாஸ்ட்" (John's breakfast) என்று பெயரிடப்பட்டுள்ளது.அவரது பெயருடன் கூடிய அந்த உணவு சேர்க்கப்பட்ட புதிய மெனுவை ஜானிடம் காட்டியபோது, அவரின் ரியாக்ஷனை உள்ளடக்கிய அந்த அற்புதமான தருணத்தை கஃபேவில் வேலை பார்க்கும் ஒரு நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். "எங்களது சிறந்த வாடிக்கையாளரான ஜான் அன்றாடம் எங்கள் கஃபேவிற்கு வந்து தனது காலை உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவார்.
View this post on Instagram
பல வருடங்களாக எங்களுக்கு அற்புதமான வாடிக்கையாளராக இருந்து வரும் ஜானின் பெயரை அவர் வழக்கமாக வாங்கி உண்ணும் உணவுக்கு பெயர் சூட்ட நினைத்து, அதனை செய்தோம். அவர் அந்த மெனுவை இன்று முதன் முதலாக பார்க்கும் பொழுது அவர் எவ்வாறு ரியாக்ட் செய்தார் என்பதை ஒரு வீடியோவாக எடுத்து உங்களுக்காக அந்த வீடியோ கிளிப்பை இங்கே ஷேர் செய்கிறோம்." என்று ரெஸ்டாரண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ இன்டர்நெட்டில் வைரலாக பரவி வருகிறது. பலரும் இது குறித்து அவர்களது கமண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.