முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / கழிவறை தண்ணீரில் காபி... சிறையில் இருந்த அனுபவத்தை பகிர்ந்த பிரபல நடிகை..!

கழிவறை தண்ணீரில் காபி... சிறையில் இருந்த அனுபவத்தை பகிர்ந்த பிரபல நடிகை..!

நடிகை கிரிசான் பெரெய்ரா

நடிகை கிரிசான் பெரெய்ரா

சுமார் மூன்று வார காலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சிறையில் இருந்த அவர் அங்கிருந்த அனுபவங்களை தன் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பகிர்ந்துகொண்டார்.

  • Last Updated :
  • Mumbai, India

போதைப் பொருள் வழக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கைதாகி சிறை சென்று, பின்னர் விடுதலை செய்யப்பட்ட பாலிவுட் நடிகை கிரிசான் பெரெய்ரா, சிறையில் தாம் அனுபவித்த சிரமங்கள் குறித்து இன்ஸ்டாகிராமில் வேதனையை பகிர்ந்து கொண்டுள்ளார்.

கிரிசான் பெரெய்ரா அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அரபு அமீரகம் சென்றார். அவர் கொண்டு சென்ற விருது ஒன்றில் போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததால், நடிகை கைது செய்யப்பட்டார். சுமார் மூன்று வார காலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் குற்றம் செய்யவில்லை என்பது நிரூபனமானதால் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து நடிகையின் தாய் உற்சாகத்தில் துள்ளி குதித்தார்.

இந்த நிலையில் நடிகைக்கு வழங்கப்பட்ட விருதில் போதைப்பொருள் மறைத்து வைத்தது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த ஆண்டனி பால், ரவி ஆகியோரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கால கட்டத்தில், கழிவறைக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரில் தனக்காக காபி தயாரித்ததாகவும், சலவை பவுடரைக் கொண்டு தனது தலைமுடியை அலசிக் கொண்டதாகவும் நடிகை கூறியுள்ளார். கடந்த 1ம் தேதியில் இருந்து சிறையில் இருந்த நடிகை கிரிசான் விரைவில் இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

top videos
    First published:

    Tags: Actress, Viral Video