முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ”பிரச்னை வரும்போது இதை பண்ணுங்க..” - பில்கேட்ஸ் வழங்கிய பொன்னான அறிவுரை..!

”பிரச்னை வரும்போது இதை பண்ணுங்க..” - பில்கேட்ஸ் வழங்கிய பொன்னான அறிவுரை..!

பில்கேட்ஸ்..

பில்கேட்ஸ்..

அமெரிக்காவின் வடக்கு அரிஸோனா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பில்கேட்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மைக்ரோசாஃப்ட் என்னும் பெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, தொழில்நுட்பத்துறையில் சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல் உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்தவர் பில்கேட்ஸ். அதேபோல கொடைப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இத்தனைக்கும் கல்லூரி படிப்பை முழுமையாக நிறைவு செய்யாமல் 3ஆவது செமஸ்டரோடு பாதியில் வெளியேறியவர் தான் பில்கேட்ஸ். இந்நிலையில், அமெரிக்காவின் வடக்கு அரிஸோனா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பில்கேட்ஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது மாணவர்களிடையே பில்கேட்ஸ் நிகழ்த்திய உரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அவர் பேசியதாவது: இங்கு நீங்கள் பெற்ற கல்வியைக் கொண்டு உலகில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதை நான் சிந்தித்துப் பார்க்கிறேன். நான் பெறாத பட்டம் குறித்து இது என்னை சிந்திக்க வைக்கிறது. பட்டமளிப்பு விழா உரையை நான் ஒருபோதும் கேட்டது கிடையாது. இன்றைக்கு இருப்பதைப் போல எனக்கு அறிவுரை கிடைக்கவும் இல்லை.

Read More : 'இந்தியன் 2' படத்தில் சம்பவம் செய்யும் அனிருத் - பாடலை ரசித்து கேட்கும் ஷங்கர் - வைரலாகும் வீடியோ

உங்கள் வாழ்க்கையில் என்னவாக வர வேண்டும் என்பது குறித்து சரியான முடிவை எடுக்க வேண்டிய சூழலில் மிகுந்த நெருக்கடி உங்களுக்கு உண்டாகும். அது நிரந்தரமானதாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால், அப்படி இருக்காது. நாளை என்ன செய்வீர்கள் அல்லது 10 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன செய்வீர்கள். நீங்கள் நினைப்பது என்றென்றும் நிலையாக இருக்கும் என்று உறுதி கிடையாது.
 
View this post on Instagram

 

A post shared by Bill Gates (@thisisbillgates)தொடக்க காலத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை ஒட்டியே என் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கழிந்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், கொடை செய்யும் வாழ்க்கைக்கு நகர்ந்து விட்டேன். குழப்பமே வராத அளவுக்கு சாதுர்யமானவர்களாக நீங்கள் இருக்க முடியாது. வாழ்க்கையின் ஏதோ ஒரு தருணத்தில் நீங்கள் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் சொந்த முயற்சியில் அதற்கு தீர்வு கிடைக்காது. அப்படியொரு சூழ்நிலை வரும்போது பதற்றம் அடைய வேண்டாம். பெருமூச்சு விட்டுக் கொள்ளுங்கள்.

என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். சாதுர்யமான நபர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். எதையும் கேட்டுத் தெரிந்து கொள்ள தயக்கம் இருக்கக் கூடாது. கல்லூரி கல்வி உங்களுக்கு நிறைவடைந்திருக்கலாம். ஆனால், வாழ்க்கையின் எஞ்சிய பகுதியையும் ஒரு பாடமாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நட்பை குறைவாக எடை போட வேண்டாம்

top videos

    இளம் பட்டதாரிகளான நீங்கள் நட்பை சாதாரணமாக எண்ண வேண்டாம். நான் சொல்ல விரும்புகின்ற இறுதி அறிவுரை இதுதான். நானும் அதைப் பயன்படுத்தியிருக்கிறேன். இதைக் கற்றுக் கொள்ள எனக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. சின்ன வயதில் வார விடுமுறை மற்றும் விடுமுறை கொண்டாட்டங்களை நான் விரும்பியது கிடையாது. பணிகளுக்கு இடையே அவ்வபோது கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் பில்கேட்ஸ்.

    First published:

    Tags: Bill Gates, Trending, Viral