மக்களின் கைகளில் ஸ்மார்ட்போன் என்பது தவிர்க்கவே முடியாத நிலை உருவாகி இருக்கிறது. அதில் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற செயலிகளை பயன்படுத்தாதவர்கள் வெகு சிலரே உள்ளனர். இதன் காரணமாகவே இந்த செயலிகளில் ஆபத்துகளும் நிறைந்திருக்கின்றன.
ஒவ்வொரு முறையும் மக்கள் இந்த செயலிகளை கவனமாக கையாள வேண்டும் என நிறுவனங்களும், வல்லுநர்களும் எச்சரித்து வருகின்றனர். தற்போது, பேஸ்புக் பக்கத்தில் புதிய மோசடி ஒன்று தலைத்தூக்கி உள்ளது. இது வேகமாக பரவி வருவதால், இதிலிருந்து நம் முகநூல் கணக்கை தற்காத்துக் கொள்வது அவசியம்.
போதிய தற்காப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பேஸ்புக் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட வாய்ப்புள்ளதாக நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடியில் இருந்து தப்பிப்பதற்கான வழிகள் எவை என்பதை பார்க்கலாம்.
அப்படியென்ன மோசடி?
மோசடி செய்பவர்கள் ஒருவரின் மரணச் செய்தியைப் பயன்படுத்தி யூசர்களை ஏமாற்றுவதற்காக பேஸ்புக்கில் ஒரு மோசமான உத்தியைப் பயன்படுத்துகின்றனர். "யார் இறந்துவிட்டார்கள் என்று பார்" என்ற தலைப்புடன் தொடங்கும் அந்த பதிவு, சம்பந்தப்பட்ட நபரின் மரணம் குறித்த கட்டுரைக்கான இணைப்புடன், பேஸ்புக் பயனர்களுக்கு அனுப்பப்படுகிறது.
அய்யோ என பரிதாபப்பட்டு நீங்கள் அந்த இணைப்பை கிளிக் செய்தால் அவ்வளவுதான். உங்கள் கணக்கு மோசடி கும்பலிடம் சிக்கிவிடும். மேலும், தனியுரிமை தகவல்களை சில நிமிடங்களில் இழக்க நேரிடும்.
“Look Who Died” என்று அழைக்கப்படும் இந்த மோசடி பேஸ்புக்கில் வேகமாக பரவி வருகிறது. பயனரின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, இந்த மோசடி அரங்கேற்றப்படுகிறது. இதுகுறித்து சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
அப்படியென்றால் இந்த மோசடி எப்படி வேலை செய்கிறது?
புகைப்படங்கள், அரட்டைகள் மற்றும் ஷாப்பிங் விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் இருப்பதால், உங்கள் Facebook கணக்கை அணுக ஹேக்கர்கள் விரும்புகிறார்கள். "யார் இறந்தது என்று பார்" என்ற இணைப்பைக் கொண்டு அவர்கள் உங்களுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறார்கள். முன்னதாகவே இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட உங்கள் நம்பரின் சுயவிவரத்தைப் பயன்படுத்தி தான், இவர்கள் உங்களை குறிவைக்கிறார்கள்.
நீங்கள் இணைப்பைக் கிளிக் செய்து உங்கள் பேஸ்புக் ஐடி, கடவுச்சொல்லை உள்ளிடும்போது, நீங்கள் அறியாமல் அவற்றை ஹேக்கர்கள் திருடிவிடுகின்றனர். இது உங்கள் தனிப்பட்ட தரவுகளை திருடவும் வழிவகுக்கிறது. மேலும், உங்கள் கணக்கில் உள்ள நண்பர்களுக்கும் இதுபோன்ற மோசடி இணைப்பை அனுப்புகிறார்கள்.
என் பேஸ்புக் கணக்கை பாதுகாக்க வழி இருக்கா?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.