இந்தியா முழுவதுமே பேச்சுலர்களும் திருமணம் ஆகாத தம்பதிகளும் வீடு எடுத்து தங்குவது என்பது சிரமமான விஷயம் தான். குறிப்பாக பெங்களூரு நகரத்தை எடுத்துக்கொண்டால், அங்கே வீடு வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றால் வேலைக்கும் சேரும் போது கூட இல்லாத அளவு கேள்விகள் கேட்கப்படும்.
இந்தியாவில் வாடகைக்கு வீடு என்றாலே திருமணமான தம்பதிகளுக்கு வாடகைக்கு விட தான் அதிகம் விரும்புகிறார்கள் . சில குடியிருப்பு சொசைட்டிகள் பேச்சுலர்களுக்கு வாடகைக்கு வீட்டை விடுவதை தடையும் செய்கின்றன. இது ஒரு எழுதப்படாத விதியாக பார்க்கப்படுகிறது.
அப்படி இருக்கும் நிலையில், சமீபத்திய Reddit இடுகை ஒன்று இணையத்தில் பரவி பேசுபொருளாக மாறி வருகிறது. இது வீட்டு உரிமையாளர்களுக்கும் வாடகைக்கு இருக்கும் மக்களிடம் ஒரு சலசலப்பையே ஏற்படுத்தி வருகிறது. அங்கே என்ன சம்பவம் நிகழ்ந்தது என்பதை இப்போது பார்ப்போம்.
ஒரு வீட்டு உரிமையாளர் சமீபத்தில் Reddit என்ற இணையதளத்தில் சில படங்களை வெளியிட்டு இருந்தார். அதை பதிவில், ‘அவருடைய பெங்களூரு வீட்டில் குடியிருந்த நபர் அந்த வீட்டை எப்படி குப்பை தொட்டிபோல விட்டுச்சென்றார் என்பதை பற்றி தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்.
பெங்களூரில் ஒரு MNC இல் பணிபுரியும் இளைஞர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். வாடகைக்கு இருந்தவர் 3-4 மாதங்களுக்கு வாடகையை செலுத்தியுள்ளார். அதன் பிறகு காணாமல் போய்விட்டார். இடையே ஓனருக்கு போன் செய்த அந்த நபர், தான் திரும்பி வர மாட்டேன் என்றும், அட்வான்ஸ் தொகையை தரவேண்டும் என்றும் போன் செய்துள்ளார்
குடியிருந்த வீட்டை முறையாக ஒப்படைக்கத் தயங்கிய வீட்டு வாடகைதாரரை நினைத்து வருந்திய வீட்டு உரிமையாளர் அட்வான்ஸ் தொகையை திரும்ப கொடுக்கும்முன் தனது வீட்டை ஒருமுறை பார்க்கச் சென்றார். அப்போது அவர் கண்ட காட்சித் தான் படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த இடம் முழுவதும் குப்பைத்தொட்டி போல இருந்துள்ளது.
ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபருக்கு தனது குடியிருப்பை வாடகைக்கு விட்ட பெங்களூரு வீட்டு உரிமையாளரின் நிலைமை எவ்வாறு தலைகீழானது என்று மேற்கோள் கட்டப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
This is why people don’t like renting to bachelors.
An “educated” bachelor working in a “large MNC” did this in Bangalore.
Got these pics from Reddit. pic.twitter.com/LbYhEk9hx5
— Ravi Handa (@ravihanda) April 26, 2023
அந்த வீட்டின் ஜன்னல்கள் மூடப்படாமல் திறந்திருந்ததால், புறாக்கள் உள்ளே வந்து மலம் கழித்து வைத்திருந்துள்ளது. வீட்டின் எல்லா இடங்களிலும் மது பாட்டில்கள் இருந்துள்ளன. சமையல் அறையும் குப்பை போல கிடந்துள்ளது. அங்கேயும் மது பாட்டில்கள். வீட்டின் நடுவே ஒரு அழுக்கு மெத்தை கிடந்துள்ளது. கழிப்பறை கூட அசிங்கமாகக் காணப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கொள்ளையர்களிடம் காதலியை தவிக்கவிட்டு ஓடிய காதலன்.. வைரலாகும் வீடியோ..
பேச்சுலர்களுக்கு வீட்டை விட்டால் இப்படி தான் ஆகிறது என்று குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் , அந்த வீட்டு வாடகைதாரர் செய்த செயலுக்கான அதை பொதுமைப்படுத்தி எல்லா பேச்சுலர்களும் அப்படி தான் என்று சொல்வதை சில பயனர்கள் எதிர்த்துள்ளனர்.
அதோடு இந்த இடத்தை சுத்தம் செய்வதற்கான தொகையை அட்வான்ஸ் பணத்தில் இருந்து துப்புரவுக் கட்டணமாக கழித்துக்கொள்ளலாம் என்றும் சில பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் வாடகைதாரர் செய்தது தவறு என்றும் சில கருத்துக்கள் வந்தவண்ணம் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rented house, Viral News