முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / தூங்குறதுனா தூங்குங்க.. லீவ் தரோம்.. ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நிறுவனம்..!

தூங்குறதுனா தூங்குங்க.. லீவ் தரோம்.. ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நிறுவனம்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

வாழ்க்கைக்கு அவசியமானது எது என்று பலரிடம் கேட்டால் சட்டென்று தாமதிக்காமல் வர கூடிய பதில் "பணம்" என்பதே. ஆனால் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதை காசு சம்பாதிக்க மெஷின் போல ஓடி கொண்டிருக்கும் பலருக்கும் புரிவதில்லை.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Bangalore, India

வாழ்க்கைக்கு அவசியமானது எது என்று பலரிடம் கேட்டால் சட்டென்று தாமதிக்காமல் வர கூடிய பதில் "பணம்" என்பதே. ஆனால் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதை காசு சம்பாதிக்க மெஷின் போல ஓடி கொண்டிருக்கும் பலருக்கும் புரிவதில்லை. உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தால் தான் தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியும் அல்லது தொழில் நடத்த முடியும். தரமான தூக்கம் வேலையில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துகிறது.

நிம்மதியாக தூங்க கூட நேரம் ஒதுக்காமல் வேலை வேலை என்று ஓடி கொண்டிருப்பதன் எதிர்விளைவு அடுத்த சில ஆண்டுகளில் உடல்நலன் பாதிக்கப்படும் என்பதே நிதர்சனமான உண்மை. ஆண்டுதோறும் மார்ச் 17 உலக தூக்க தினம் அனுசரிக்கப்படும் நேரத்தில் ஊழியர்களுக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தி இருக்கிறது பெங்களூருவை சேர்ந்த நிறுவனம் ஒன்று.

இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மார்ச் 17-ஆம் தேதியான இன்று அதாவது உலக தூக்க தினம் அனுசரிக்கப்பட்டுவரும் இந்த நாளில் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. உலக தூக்க தினத்தை முன்னிட்டு தனது ஊழியர்களுக்கு பெங்களூருவை சேர்ந்த ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனமான Wakefit Solutions இன்று ஆப்ஷனல் ஹாலிடே அறிவித்து உள்ளது. இந்த நிறுவனம் D2C ஹோம் அண்ட் ஸ்லீப் சொல்யூஷன்ஸ் ஸ்டார்ட்-அப் ஆகும்.

Read More : பொம்மை காரில் ஊர்வலம், அமர்க்களமான விருந்து... ஊரே வியக்க நாய்களுக்கு நடந்த திருமணம்..!

Wakefit Solutions நிறுவனம் தனது அதிகாரபூர்வ லிங்க்ட்இன் பேஜில் ஒரு போஸ்ட்டை ஷேர் செய்துள்ளது. அந்த போஸ்ட்டில் நிறுவனம் அதன் அனைத்து ஊழியர்களுக்கும் அனுப்பிய இமெயிலின் ஸ்கிரீன்ஷாட்டை ஷேர் செய்துள்ளது. "Surprise Holiday: Announcing Gift of Sleep" என்ற டைட்டிலில் குறிப்பிட்ட இந்த ஸ்பெஷல் மெயிலை ஊழியர்களுக்கு அனுப்பி இருக்கிறது Wakefit Solutions.

ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட இமெயில்..!

இந்த மெயிலில், "மார்ச் 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சர்வதேச தூக்க தினத்தை Wakefit அதன் அனைத்து ஊழியர்களுக்கும் விருப்ப விடுமுறையை அளித்து கொண்டாடுகிறது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த சர்வதேச தூக்க தினத்தை வெள்ளிக்கிழமையில் வரும் ஒரு பண்டிகையை போல நாங்கள் கருதுகிறோம்! HR போர்டல் மூலம் மற்ற விடுமுறை நாட்களைப் போலவே இந்த ஸ்பெஷல் விடுமுறையையும் நீங்கள் பெறலாம்" என ஊழியர்களுக்கு கூறி உண்மையிலே சர்ப்ரைஸ் அளித்து உள்ளது.

இந்த மெயிலின் ஸ்கிரீன் ஷாட்டை ஷேர் செய்த நிறுவனம், Wakefit மூலம் அல்ட்டிமேட் ஸ்லீப்பிங் கிஃப்ட்டை அனுபவிக்கவும் உலக தூக்க தினத்தை கொண்டாடும் வகையில், அனைத்து Wakefit ஊழியர்களுக்கும் லாங் வீக்எண்ட்டின் ஒரு பகுதியாக மார்ச் 17, 2023 அன்று ஒரு நாள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மிகவும் தேவையான ஓய்வீடுக மற்றும் ரிலாக்ஸ் செய்ய இது சரியான வாய்ப்பு.! என கூறி இருக்கிறது.

மேலும் வேலை நேரத்தில் தூக்கம் வருகிறது என்ற சொல்பவர்களின் எண்ணிக்கை 21% அதிகரித்துள்ளது மற்றும் எந்த நாளில் காலை எழுந்தாலும் சோர்வாகவே இருக்கிறது என்று சொல்பவர்களின் எண்ணிக்கை 11% அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இப்படி தூக்கமின்மை பரவலாக இருப்பதை கருத்தில் கொண்டு, உலக தூக்க நாளை கொண்டாட தூக்கத்தை பரிசாக அளிப்பதை விட வேறு என்ன சிறப்பு பரிசு இருக்க முடியும்.! என கூறி இருக்கிறது.

First published:

Tags: Tamil Nadu, Trending, Viral