முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / மேற்கு வங்கத்தின் மிராக்கிள் பழம்.. பழத்தில் உள்ள தனித்துவம் இது தான்..!

மேற்கு வங்கத்தின் மிராக்கிள் பழம்.. பழத்தில் உள்ள தனித்துவம் இது தான்..!

மிராக்கிள் பழம்..

மிராக்கிள் பழம்..

அதிக வெயில்பாங்கான இடங்களில் மட்டும் வளரும் இந்த மிராக்கிள் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் கே உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக இந்தப் பழத்தில் உள்ள மிராக்குலின் என்ற புரதம் தான் இந்த பழத்திற்கு இத்தகைய சிறப்பைச் சேர்க்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

புதுவிதமான பழங்கள் மற்றும் காய்கறிகள் என்றால் மக்களிடம் தனிவரவேற்பு கிடைக்கும். அதிலும் அதிக சுவையுடைய உணவுகள் கிடைத்தால் சொல்லவே தேவையில்லை. எங்கு கிடைத்தாலும் மிஸ் பண்ண மாட்டோம். இதுப்போன்ற தனித்துவமான பழ தோட்டத்தைப் பராமரித்து வருகிறார் மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் வசிக்கும் தபஸ் பங்கல். மிராக்கிள் ஃப்ரூட் அல்லது மிராக்கிள் பெர்ரி என்றழைக்கப்படும் இந்த பழ மரத்தை தனது தோட்டத்தில் பாதுகாத்து வளர்த்து வருகிறார் தபஸ் பங்கல்.

தன்னுடைய தோட்டத்தில் விளைவிக்கப்படும் மரங்கள் மற்றும் செடிகள் குறித்து பேசிய இவர், தோட்டத்தில் பலவிதமான பூக்கள், பழங்கள் மற்றும் மூலிகை செடிகளை நான் வளர்த்து வந்தாலும் மிராக்கிள் செடி ஒரு வித தனித்துவமான மகிழ்ச்சியை வழங்குவதாக கூறுகிறார்.மேலும் இந்த பழத்தை நீங்கள் சாப்பிட்டு, புளிப்பு சுவையுடைய பழத்தை நீங்கள் சாப்பிட்டாலும், உங்களுக்கு இனிப்பு சுவையைத் தான் கொடுக்கும் எனவும், முதல் முறையாக இந்த பழத்தை ருசிப்பவர்கள் இந்த சுவையிலிருந்து எப்போதும் மீண்டு வர முடியாது என வியப்புடன் கூறுகிறார். ஆனால் என்ன இந்த பழத்தின் அருமை பலருக்கும் தெரியவில்லை என வேதனையடைகிறார்.

இதனால் தான் பல ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த மரத்தை வேறு மாவட்டத்தில் இருந்து கொண்டு வந்து வளர்கிறேன் எனவும் கூறுகிறார். தற்போது இந்த பழ மரம் தான் மற்றவர்களிடமிருந்து என்னைத் தனித்துவமாக காட்டுவதாகவும் கூறுகிறார்.மிராக்கிள் பழத்தை ருசித்த அப்பகுதியைச் சேர்ந்த அமித் சந்திரா என்பவர் கூறுகையில், இந்த பழம் தனக்கு நம்ப முடியாத அதிசய பழமாக இருந்தது என கூறினார். மேலும் இந்த பழத்தை ஆரம்பத்தில் சுவைக்கும் போது, எலுமிச்சை பழத்தை ஒத்திருந்தது எனவும், ஆனால் சில நிமிடங்களிலேயே இனிப்பு சுவையைத் தரும் அளவிற்கு மிராக்கிள் செய்தது எனவும் இவர் தெரிவித்தார்.

Read More : நடுவழியில் திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்.. உத்தமபாளையத்தில் பரபரப்பு..

மிராக்கிள் பழத்தில் உள்ள நன்மைகள்: அதிக வெயில்பாங்கான இடங்களில் மட்டும் வளரும் இந்த மிராக்கிள் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் கே உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக இந்தப் பழத்தில் உள்ள மிராக்குலின் என்ற புரதம் தான் இந்த பழத்திற்கு இத்தகைய சிறப்பைச் சேர்க்கிறது. இதோடு இந்த பழங்களை நீங்கள் சாப்பிடும் போது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடல் எடைக்குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கும் இது மிகச்சிறந்த பழமாகும். இனிப்பு சுவை இருந்தாலும் சர்க்கரை இல்லை என்பதால் அனைவரும் சாப்பிடும் பழ வரிசையில் இந்த மிராக்கிள் பழம் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பித்தக்கது.

First published:

Tags: Trending, Viral