பொதுவாக 80 வயது முதியவர் என்றால் கையில் ஊன்றுகோல் என்பது தான் நம்முடைய கற்பனையாக இருக்கும். ஆனால் மகாராஷ்டரா மாநிலம் வார்தா (Wardha) என்ற பகுதியை சேர்ந்த 84 வயதுடைய முதியவரின் கதையே வேறு. நாம் பார்க்க போகும் 84 வயது முதியவரின் பெயர் ஜன்ராவ் குஷால்ராவ் லோங்கர் (Janrao Khushalrao Lonkar) என்பதாகும். இவை பற்றி நாம் இங்கே பேச முக்கிய காரணம் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் வயதானாலும் கூட சற்றும் இன்னும் இவருக்கு குறையவில்லை. ஜன்ராவ் குஷால்ராவ் லோங்கர் முன்னாள் காவல்துறை அதிகாரி ஆவார்.
வயதானலும் கூட ஒன்றன்பின் ஒன்றாக ரெக்கார்ட் செய்வதை நிறுத்தவில்லை. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடத்தப்பட்ட பல போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் சுமார் 114 பதக்கங்களை பெற்றுள்ளார். வயது முதிர்ந்தாலும் கூட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்ற பேரார்வம் இவரிடம் தற்போது வரையிலும் குறையாதது இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கிறது.
போலீஸ் அதிகாரியாக... : ஜன்ராவ் லோங்கர் தனது 18 வயதில் காவல்துறையில் சேர்ந்தார். மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் பல காவல் நிலையங்களில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியுள்ளார். தனது 48 வயதில் காவல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது 80 வயதை கடந்தும் எதிலும் துடிப்போடு சுறுசுறுப்பாக செயல்படுகிறார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நடத்தப்படும் பல விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்புகிறார்.
Read More : ஹாரி - மேகன் தம்பதியை ஆபத்தான முறையில் துரத்திய புகைப்பட கலைஞர்கள்... காரணம் என்ன?
114 மெடல்கள் : இதுவரை 114 மெடல்களை வாங்கி குவித்துள்ள 84 வயதான ஜன்ராவ் லோங்கர் அப்படி எந்த ஸ்போர்ட்ஸில் சிறந்து விளங்குகிறார் என்ற கேள்வி எழலாம். இங்கு தான் அடுத்த ஆச்சர்யம் காத்திருக்கிறது. ரேஸ்கள், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், டேபிள் த்ரோ, ஜம்பிங், டிரிபிள் செஸ்ட், ஹர்டில் ரேஸ் போன்ற 26 முதல் 27 வெவ்வேறு விளையாட்டுகளில் பங்கேற்று 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்துள்ளார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு மெடல்களை வாங்கி இருக்கிறார் இவர்.
இவரது வெற்றிகளுக்கான ரகசியம் : 84 வயதான ஜன்ராவ் குஷால்ராவ் லோங்கர் தனது ஆரோக்கியத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். காலை சீக்கிரம் தூங்கி எழும் இவர் இதற்கேற்ப இரவல் நேரத்தோடு தூங்க செல்கிறார். காலை எழுந்தவுடன் தவறாமல் உடற்பயிற்சி செய்வதோடு, உணவுகளை சரியான நேரத்தில் எடுத்து கொள்கிறார். இந்த பழக்கங்கள் தனக்கு ஆரோக்கியமாக இருக்க உதவுவதாக கூறுகிறார். இவர் தன்னை உடல் மற்றும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள மத ரீதியான விஷயங்களை கடைபிடிக்கிறார். மற்றவர்களுக்கு உத்வேகமாக இருக்கும் தன்னை கவனித்து கொள்வதில் 81 வயதான தனது மனைவி சுமன் ஜன்ராவ் லோங்கரின் பங்கு அதிகம் என்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Maharashtra, Trending, Viral