இயற்கையின் முக்கிய அங்கமாக இருப்பவை மரங்கள். நாம் சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் வழங்குகிறது. உணவு, மருத்து பொருட்கள், நிழல் போன்றவற்றை அளித்துக்கொண்டு வருகிறது. மேலும் பூமிக்கு உயிரளிக்கும் மழை பெய்ய உதவுகிறது. நம் வாழ்வில் அன்றாட இயற்கை அங்கமாக இருக்கும் மரங்கள் விரும்பும் ஒருவர், மரங்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மரங்களில் தற்காக்க மரங்களில் ஓவியங்கள் வரைந்து அசத்தி வருகிறார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஓவியர் சஞ்சய் சர்க்கார். மேற்குவங்க மாநிலம் பானிப்பூர் பகுதியில் ஹப்ராவை சஞ்சய் சர்க்கார் வசித்துவருகிறார். இவர் மரங்களின் தண்டுகளில் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களைக் கொண்டு பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்து வருகிறார். இவரின் கை வண்ணத்தில் மரங்களில் கடவுள்கள், விலங்குகள், பறவைகள் என ஓவியம் தத்ரூபமாக மிளிர்கின்றன. இப்படி தன் ஓவியங்கள் மூலம் இயற்கைக்கு நன்றி பாராட்டுகிறார். மரங்கள் வெட்டப்படாமல் தடுப்பதற்காக சஞ்சய் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
இப்படி மரங்களில் சஞ்சய் வரையும் ஓவியங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. இவரின் முயற்சியைப் பலரும் பாராட்டி வருகிறார்கள். மரங்களில் வரையப்பட்ட ஓவியங்கள் முன்னால் கூட்டம் கூட்டமாக மக்கள் நின்று செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள்.
தன் ஓவியங்கள் மூலம் இயற்கை மீது மக்களுக்கு மரியாதையும், அதைப் பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணமும் வர வேண்டும் என்பது தனது குறிக்கோள் என்கிறார் சஞ்சய் சர்க்கார். இவரது மர ஓவியங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு பலரும் அதைப் பாராட்டி வருகிறார்கள். இப்படி இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்கிற இவரது விழிப்புணர்வு சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
மரங்கள் நம் மண்ணின் பாதுகாவலன் என்ற எண்ணம் நமக்கு ஏற்பட வேண்டும். அப்படி எண்ணம் நமக்குள் உதித்தால் மரங்களைப் பாதுகாக்க நாமே உறுதி கொள்வோம். அப்படியான எண்ணம் நமக்குள் எழ வேண்டும் என்ற பணியைத் தான் தனது ஓவியங்கள் வழியாகச் செய்து வருகிறார். சஞ்சய் சர்க்கார். சஞ்சய் சர்க்காரின் முயற்சிக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Deforestation, Painting, Tree plant