நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் பல பொருட்கள் கடந்த காலத்தில் இருந்ததாக பலர் சொல்வதுண்டு. ஆனால், அவர்களிடம் அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அவர்கள் பார்த்ததை அல்லது அனுபவித்ததை வார்த்தைகளால் மட்டுமே சொல்கிறார்கள். ஆனால் இப்போது ஒரு சிலையின் புகைப்படம் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த சிலை கிரேவ் நிஸ்கோஸ் என்று அழைக்கப்படுகிறது. இதில், ஒரு பெண் நாற்காலியில் அமர்ந்திருக்க, நின்று கொண்டிருக்கும் சிறுமியின் கையில் லேப்டாப் மாதிரியான ஒன்று இருக்கிறது.
இந்த சிலை பண்டைய கிரேக்க காலத்தில் கிமு 100-களைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், டைம் டிராவல் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் மத்தியில் ஒருவித பீதி ஏற்பட்டுள்ளது. இந்த 37 அங்குல சிலை கிரேக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், ஒரு பெண் அமர்ந்திருக்க, மற்றவர் கையில் லேப்டாப் மாதிரியான ஒன்று இருந்தது.
USB போர்ட் போன்ற துளைகளும் அதன் பக்கங்களில் காணப்பட்டன. இந்த சிலை தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஜே பால் கெட்டி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதன் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது உண்மையில் லேப்டாப் என்று பலர் இப்போது நம்பத் தொடங்கியுள்ளனர்.
இந்த படம் தொடர்பாக ட்விட்டரில் விவாதம் நடந்து வருகிறது. இந்த பண்டைய கிரேக்க சிலையில் காணப்படும் மடிக்கணினி டைம் டிராவலின் அடையாளமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். குறிப்பாக அதன் USB போர்ட் கவனத்தை ஈர்த்துள்ளது. இது டேப்லெட்டா அல்லது டைம் டிராவல் பயணி தனது மடிக்கணினியை எடுத்துச் சென்றாரா என்றும் விவாதம் கிளம்பியுள்ளது. இருப்பினும், இது முகம் பார்க்கும் கண்ணாடியாக இருக்கலாம் என்றும் பலர் நம்புகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Laptop