பூமிக்குள் எத்தனை ஆழமான ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதை யாராலும் யூகிக்க முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒன்றை புதிதாக அறிந்து ஆச்சரியப்படுகிறோம். அந்தவகையில், நீங்கள் ஆச்சர்யப்படும் இன்னொரு செய்தியை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
நெக்ரோபோலிஸ் அமைந்துள்ள கல்லறை உலகின் மிகவும் பழமையான கல்லறையாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு இங்கு நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, உலகின் பழமையான தங்க ஆபரணத்துடன் பழங்கால எலும்புக்கூடு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. தங்க ஆபரணங்களுடன் எலும்புக்கூடுகளை கண்டெடுக்கப்படுவது புதிய விஷயம் அல்ல. இதற்கு முன்னரும் இது போல பல ஆபரணங்கள் மற்றும் எலும்பு கூடுகள் கிடைத்துள்ளது. இது குறித்த படங்களை @historyinmemes என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
கருங்கடலின் பல்கேரிய கடற்கரையில் அமைந்துள்ள இந்த இடம் கிமு 4560 - 4450 க்கு முந்தையது. இதுவரை 290-க்கும் மேற்பட்ட கல்லறைகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட தங்கத்தால் ஆன கலைப்பொருட்கள் மற்றும் நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அது மட்டும் அல்ல இந்த கல்லறையின் கதையும் மிகவும் சுவாரஸ்யமானது.
பல்கேரியாவின் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, 1972 இல் இங்கு ஒரு தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது பல தங்க ஆபரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தனர். ஏனென்றால், இது மிகவும் பழமையானது. இதையடுத்து, அவர்கள் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பல கல்லறைகளை தோண்டினார்கள். அதில், ஒன்று தனித்துவமானது. கல்லறை எண் 43 இலிருந்து கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் ஒரு ஆட்சியாளர் அல்லது தலைவருக்கு சொந்தமானதாகத் தெரிகிறது.
ஏனென்றால், அந்தக் கல்லறைகள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடையதாக இருக்கலாம். The Archaeologist இன் அறிக்கையின்படி, ரேடியோகார்பன் டேட்டிங் தம்ரியுகாவின் கல்லறைகள் கிமு 4560-4450 க்கு முந்தையவை என்று தெரியவந்துள்ளது. வர்ண கலாச்சாரம் தொலைதூர கருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளுடன் வர்த்தக உறவுகளை கொண்டிருந்ததற்கான சான்றுகள் உள்ளது.
Also Read | Watch : 25 வருடங்கள் கழித்து டேட்டிங் சென்ற 93 வயது பாட்டி... வருத்தத்துடன் திரும்பியது ஏன்?
இங்கிருந்து வெளிநாடுகளுக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கலாம். இங்குள்ள பல கல்லறைகளில் இருந்து தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், இந்த கல்லறைகள் அரச குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. கல்லறை எண் 36 இல், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கிரீடங்கள், காதணிகள், கழுத்தணிகள், பெல்ட்கள், வளையல்கள் மற்றும் பல உட்பட 850 தங்கப் பொருட்களைக் கண்டுபிடித்தனர்.
கல்லறையில் சுமார் 1.5 கிலோ தங்க ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டன. அறிக்கையின்படி, கருவூலத்தில் இருந்து இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தங்க கலைப்பொருட்களின் மொத்த எடை 6.5 கிலோவுக்கும் அதிகமாகும். கல்லறை எண் 43 இன் எச்சங்கள் 40 முதல் 45 வயதுடைய ஒரு ஆணின் கல்லறையாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன. கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூட்டின் உயரம் 5 அடி 6-8 அங்குலம் என்று கூறப்படுகிறது.
இந்த கல்லறையில் இருந்து அதிகபட்சமாக 1.5 கிலோ தங்க ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது அரசனின் கல்லறையாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏனென்றால், ஒரு அரசனால் மட்டுமே அந்த காலத்தில் இவ்வளவு ஆபரணங்கள் அணிய முடியும். ஆனால், இந்தப் பகுதியில் இன்னும் முழுமையான அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தொல்லியல் துறையினர் சில நாட்களுக்கு முன் முயற்சி செய்தும் முழுமையாக வெற்றி பெறவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Viral News, Viral Video