முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / கணவர்களை கவனித்துக்கொள்ள தனி இடமா? வித்தியாச பிஸினஸை புகழ்ந்து தள்ளிய ஆனந்த் மகேந்திரா!

கணவர்களை கவனித்துக்கொள்ள தனி இடமா? வித்தியாச பிஸினஸை புகழ்ந்து தள்ளிய ஆனந்த் மகேந்திரா!

ட்ரெண்டிங்

ட்ரெண்டிங்

ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட் ட்விட்டர் பயனர்களிடமிருந்து கலவையான பதில்களை பெற்று வருகிறது..

  • Last Updated :
  • chennai |

சாதாரணமாக வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்ள குழந்தைகளுக்கான பராமரிப்பு மையங்களில் விட்டு செல்வர். அந்த கலாச்சாரம் இப்போது எல்லோருக்கும் பழகிவிட்டது. ஆனால் கணவர் பகல்நேர பராமரிப்பு மையம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஆனால் அது உண்மைதான். அத்தகைய கணவர் பராமரிப்பு மையத்தின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவே இந்த பதிவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பகிர்ந்தது மட்டும் அல்லாமல் இந்த புதுமையான முயற்சியை மிகவும் பாராட்டியும் உள்ளார்.

டென்மார்க்கில் உள்ள ஒரு கஃபே பற்றிய இந்த தனித்துவமான யோசனையைப் பற்றி நீங்கள் இந்த செய்தித் தொகுப்பில்  தெரிந்துகொள்ள உள்ளீர்கள். கோபன்ஹேகனில் உள்ள க்ரீன் டவர்ஸில் உள்ள கஃபே, அதன் நகைச்சுவையான சைன்போர்டினால் சமூக ஊடகங்களில் ஒரே இரவில் பரபரப்பாக மாறியது.

அதில், “உங்களுக்கு நேரம் தேவையா? ஓய்வெடுக்க நேரம் வேண்டுமா? ஷாப்பிங் செல்ல வேண்டுமா? உன் கணவனை எங்களிடம் விட்டுவிட்டு போங்க ! உங்களுக்காக நாங்கள் அவரை கவனித்துக்கொள்கிறோம்! நீங்கள் அவருடைய பானங்களுக்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதும் என்ற தனித்துவமான யோசனை மற்றும் சைன்போர்டு வணிக அதிபர் ஆனந்த் மஹிந்திராவைக் கவர்ந்ததாகத் தெரிகிறது, இந்த புதிய முயற்சிக்கு அவர் ட்விட்டரில் தனது பாராட்டை வெளிப்படுத்தினார்.

"புதுமை என்பது புதிய பொருட்களை தயாரிப்புகளை உருவாக்குவது மட்டுமல்ல. ஏற்கனவே உள்ள தயாரிப்பு வகைக்கு முற்றிலும் மாறுபட்டு புதிய பயன்பாட்டு நிகழ்வுகளை உருவாக்குவது பற்றியதும் தான்! புத்திசாலித்தனமான முயற்சி,” என்று அவர் தனது ட்வீட்டில் எழுதியுள்ளார். வணிகங்கள் எவ்வாறு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான சேவைகளை வழங்க முடியும்  என்பதற்கு தி ஹஸ்பண்ட் டே கேர் சென்டர் ஒரு சிறந்த உதாரணம் என்பதை மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஒப்புக்கொள்கிறார்.

ஷாப்பிங் செய்ய நண்பர்களோடு வெயில் செல்ல திட்டமிட்டால் குழந்தைகளை எப்படி பார்த்துக்கொள்ள ஒரு ஆளை பிடிக்கிறோமோ அதே போல தான் இங்கேயும் கணவன்மார்கள் நேரத்தை கடத்த தேவையான அனைத்தையும் வைத்துள்ளார்கள். இந்த வித்தியாசமான தீம் டென்மார்க் மக்களை மட்டுமில்லாது உலக மக்களை ஈர்த்து வருகிறது.

இதையும் பாருங்க: கால்கள் இல்லை.. மன உறுதி இருக்கு.. ஊக்கம் தரும் நடைபாதை ஜோடி.. வைரல் கதை!

top videos

    ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட் ட்விட்டர் பயனர்களிடமிருந்து கலவையான பதில்களை பெற்று வருகிறது. பெண்களை தங்கள் கணவர்களின் தொந்தரவின்றி ஷாப்பிங் செய்ய ஊக்குவிப்பதற்காக இது ஒரு சிறந்த கண்டுபிடிப்பு என்று சிலர் சொல்கிறார்கள். ஒரு சிலர், ஆண்கள் கவனித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை மற்றும் வீட்டில் தங்கலாம் என்று கருதினர்.

    First published:

    Tags: Anand Mahindra, Trending News