முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / வைரலான வீடியோ..! பழம் விற்கும் பெண்மணியை ரியல் ஹீரோ என பாராட்டிய ஆனந்த் மகேந்திரா

வைரலான வீடியோ..! பழம் விற்கும் பெண்மணியை ரியல் ஹீரோ என பாராட்டிய ஆனந்த் மகேந்திரா

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

கர்நாடகாவில் உள்ள அங்கோலா பேருந்து நிலையத்தில் பழங்களை விற்பனை செய்யும் அந்தப் பெண்ணின் காணொலி ட்விட்டரில் மிகவும் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

  • Last Updated :
  • Andhra Pradesh, India

எப்போதுமே நாம் இருக்கும் இடத்தை சுத்தமுடன் வைத்துக் கொள்வதை பற்றி சிறு வயது முதலே அனைவருக்கும் போதிக்கப்பட்டு வந்துள்ளது. கிட்டத்தட்ட கடவுளுக்கு நிகராக முக்கியமான ஒரு விஷயமாக ‘சுத்தமாக இருத்தல்’ என்பது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அதே சமயத்தில் அனைவரும் இதனை கடைப்பிடிப்பதில்லை. மிகப் பெரும் அளவில் வசதி வாய்ப்பு படைத்தவர்கள் கூட பொது இடங்களில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் நிலையில், கர்நாடகாவில் உள்ள பேருந்து நிலையத்தில் பழம் விற்கும் பெண்மணி ஒருவர் அனைவரும் நெகிழ்ச்சி அடையும் வகையில் ஒரு செயலை செய்துள்ளார்.

கர்நாடகாவில் உள்ள அங்கோலா பேருந்து நிலையத்தில் பழங்களை விற்பனை செய்யும் அந்தப் பெண்ணின் காணொளி ட்விட்டரில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த காணொளியில் அங்கு செல்லும் பொதுமக்கள் பலரும் பெண்மணியிடமிருந்து பழத்தை வாங்கி பிறகு, அதன் எச்சங்களை ஜன்னல்களின் வழியாக அங்கே அருகில் இருக்கும் பகுதிகளில் தூக்கி வீசுகின்றனர்.

ஆனால் இந்த பழம் விற்கும் பெண்மணி தானே முன்வந்து அந்த இடத்தை சுத்தம் செய்கிறார். அங்கு போடப்பட்டுள்ள இலைகளை சரியான கால இடைவெளியில் எடுத்து அங்குள்ள குப்பைத் தொட்டியில் போடுகிறார். இது ஒரு எளிய செயலாக இருந்தாலும் உண்மையிலேயே அந்த பெண்மணி இதனை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் அந்த முதிய பெண்மணி அவருடைய பொறுப்பை உணர்ந்து அந்த இடத்தை சுத்தம் செய்துள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Read More : ஆண்களை விரட்டி விரட்டி அடிக்கும் பெண்கள்... ஜோத்பூரில் கொண்டாடப்படும் விநோத திருவிழா

பாரம்பரிய முறையில் நீல நிறத்தில் வித்தியாசமாக உடை அணிந்திருக்கும் அந்த பெண்மணி, அங்குள்ள குப்பைகளை அவ்வபோது எடுத்து அருகே உள்ள குப்பை தொட்டியில் போடுகிறார். ஆதர்ஷ் ஹெக்டே என்பவர் ட்விட்டரில் இந்த காணொளியை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த காணொளியானது மிகப் பெரும் அளவில் வைரலாக, மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா இந்த காணொளியை பார்த்து மிகவும் கவரப்பட்டுள்ளார்.

மேலும் அந்த காணொளியில் இருக்கும் பெண்மணியை உண்மையான கதாநாயகி எனவும், பாரத் ஸ்வச் இயக்கத்திற்காக அயராது உழைக்கும் ஒருவர் என்றும் பாராட்டியுள்ளார். அப்பெண்மணியை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்வதற்கான தகவல்களையும் கேட்டுள்ளார். அவரது ட்வீட்டில் “இது போன்ற உண்மையான, அமைதியான கதாநாயகர்கள் தான் ஸ்வச் பாரத்தை நடத்தி வருகிறார்கள்.

top videos

    எனக்கு அந்தப் பெண்மணியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் அவரது இந்த உழைப்பை அனைவருக்கும் தெரியப்படுத்துவதுடன் அவருக்கு பாராட்டுக்களும் கிடைக்க வேண்டும். அங்கு வசிக்கும் யாரேனும் ஒருவர் அப்பெண்மணியை தொடர்பு கொள்ள முடியுமா?” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த காணொளியில் உள்ள பெண்மணியின் இந்த செயலை பாராட்டி ட்விட்டரில் பலரும் அவருக்கு தலைவணங்கி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    First published:

    Tags: Anand Mahindra, Karnataka, Trending, Viral Video