முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / இந்திய கடலில்தான் கரைக்கனும்.. அமெரிக்க குடிமகனின் கடைசி ஆசை..!

இந்திய கடலில்தான் கரைக்கனும்.. அமெரிக்க குடிமகனின் கடைசி ஆசை..!

துங்கபத்ரா நதி..!

துங்கபத்ரா நதி..!

 ஜான் மெர்வின் ஃபிரிட்ஸ் என பெயர் கொண்ட அமெரிக்க அகழ்வாராய்ச்சியாளர், தனது கடைசி ஆசையை ஏற்கனவே தன்னை சுற்றியுள்ளவரிடம் பகிர்ந்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பண்டைய காலம் முதலே இந்தியாவில் உள்ள  கலாச்சாரத்தை உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களும் வியந்து போற்றி வருகின்றனர். அதிலும் மேலைநாட்டு மக்கள் பலரும் தங்களது ஆன்மீக நாட்டத்தை தீர்த்துக் கொள்ள இந்தியாவை நோக்கி படை எடுத்த வண்ணம் உள்ளனர். மேலும் நமது இந்தியாவின் பண்பாடு மற்றும் கலாச்சாரமாகியவை உலகில் உள்ள அனைவருக்குமே ஒரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது.

சில நேரங்களில் இந்தியர் அல்லாத பலரும் இந்தியாவிற்காகவும் இந்து மதத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் மீதும் அதீத ஆர்வம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் சமீபத்தில் கர்நாடகாவில் உள்ள துங்கபத்திர நதிக்கரையில் நடந்தேறியுள்ளது.

ஜான் மெர்வின் ஃபிரிட்ஸ் என பெயர் கொண்ட அமெரிக்க அகழ்வாராய்ச்சியாளர், தனது கடைசி ஆசையை ஏற்கனவே தன்னை சுற்றியுள்ளவரிடம் பகிர்ந்துள்ளார். அதாவது தான் இறந்த பிறகு தன்னுடைய அஸ்தியை கர்நாடக மாநிலத்தில் உள்ள துங்கபத்ரா நதிக்கரையில் கரைக்க வேண்டும் என்பது அவரது கடைசி ஆசையாகும்.

Read More : 19 மாடி கட்டிடத்தின் நடுவில் செல்லும் ரயில்.. வியக்க வைக்கும் வீடியோ!

முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த அவர், அதன் பிறகு பலமுறை இந்தியாவையும் கர்நாடகாவையும் பார்வையிட்டுள்ளார். இங்கு பின்பற்றப்படும் இந்து கலாச்சாரத்தையும், இந்தியர்களின் பண்பாட்டின் மீதும் அதீத ஆர்வம் கொண்ட அவர் இந்தியாவில் பின்பற்றப்படும் பல்வேறு பழக்க வழக்கங்களையும் நுணுக்கமாக ஆராய துவங்கினார்.

முக்கியமாக இந்துக்கள் ஒரு மனிதரின் பிறப்பு முதல் இறப்பு வரை செய்யும் பூஜைகள் சடங்குகள் ஆகியவற்றின் மீது இவர் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். இந்து மதத்தின் பழக்கவழக்கங்களின்படி ஒரு மனிதன் இறந்த பிறகு அவனது உடலுக்கு பல்வேறுவது சடங்குகள் செய்யப்படும். அதில் கடைசியாக இறந்தவரின் உடலை எரித்த பிறகு அந்த அஸ்தியை கடலிலோ அல்லது புண்ணிய நதிகளிலும் கரைத்து விடுவார்கள்.

இந்தியர்களின் இந்த கலாச்சாரத்தை கூர்ந்து கவனித்து அந்த அமெரிக்கர், தனது இந்துக்களின் முறைப்படியே தான் இறந்த பிறகு தனது அஸ்தியையும் கர்நாடகாவில் உள்ள துங்கபத்ரா நதியில் கரைக்க வேண்டும் என்று தனது கடைசி ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். நீண்டகாலமாக புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவதிப்பட்டு வந்த ஃபிரிட்ஜ் கடந்த மாதம் லண்டனில் காலமானார். உடனடியாக அவரது கடைசிய ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது மகள் அலைஸ் மற்றும் அவரின் பேரன் வில்லியமும் லண்டனிலிருந்து இந்தியாவிற்கு நீண்ட பயணம் செய்து, கர்நாடகாவில் இருக்கும் தூங்கா நதிக்கரையில் அவரது அஸ்தியை கரைத்து அவரது கடைசி ஆசையை நிறைவேற்றி உள்ளனர்.

top videos

    இது மட்டுமல்லாமல் இந்துக்களின் சம்பிரதாயப்படியே அஸ்தியை கரைத்த பிறகு நதிக்கரையில் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் பூஜையையும் அவர்கள் செய்துள்ளனர்.இந்தியர்களையும் இந்து மக்களின் கலாச்சாரத்தையும் பழமையும் பறைசாற்றும் படியும், மேலை நாட்டு மக்கள் எந்த அளவிற்கு இந்திய கலாச்சாரத்தின் மீது விருப்பமாக உள்ளனர் என்பதையும் காண்பிக்கும் படியாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

    First published:

    Tags: Trending, Viral