முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / 'இது மீனா... முதலையா?' - போபால் குளத்தில் கண்டறியப்பட்ட அரிய வகை மீனால் பொதுமக்கள் அச்சம்!

'இது மீனா... முதலையா?' - போபால் குளத்தில் கண்டறியப்பட்ட அரிய வகை மீனால் பொதுமக்கள் அச்சம்!

 அலிகேட்டர் மீன்

அலிகேட்டர் மீன்

முதலை போன்ற தலை மற்றும் கூர்மையான பற்களைக் கொண்ட ஒரு வகை இன மீன் தான் அலிகேட்டர். அமெரிக்க உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிகம் காணப்படும் இந்த வகை மீன்களை சமீபத்தில் போபால் குளத்தில் இருப்பதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

  • Last Updated :
  • Madhya, India

முதலை போன்ற தலை மற்றும் கூர்மையான பற்களைக் கொண்ட ஒரு வகை இன மீன் தான் அலிகேட்டர். அமெரிக்க உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிகம் காணப்படும் இந்த வகை மீன்களை சமீபத்தில் போபால் குளத்தில் இருப்பதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த வகை மீன்கள் குளத்தில் இருந்தால், சுற்றுச்சூழல் அமைப்பை சீர்குலைப்பதோடு, பொதுமக்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், நிபுணர்கள் இதுக்குறித்து பல்வேறு ஆய்வுகளை நடத்திவருகின்றனர்.

போபால் குளத்தில் அலிகேட்டர் மீன்: கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி போபாலில் உள்ள குளம் ஒன்றில் அலிகேட்டர் இன மீன்கள் இருப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. இதை முதலில் பார்த்த அனஸ் என்ற நபர், ஆரம்பத்தில் பார்க்கும்போது குட்டி முதலை என்று நினைத்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் நன்றாக உற்றுப்பார்த்த பொழுதுதான் அது ஒருவகை மீன் என கண்டறிப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு முதலை போன்ற முகம் மற்றும் கூர்மையான பற்களைக் கொண்ட அலிகேட்டர் கார்ஃபிஷ் என்ற இந்த வகை மீன்கள், வட அமெரிக்காவில் அதிகளவில் காணப்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எப்படி போபாலில் உள்ள குளத்திற்கு வந்தது என்பது குறித்து வனத்துறை நிர்வாகம் விசாரித்து வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களில் உள்ள சந்தைகளில் இருந்து மீன்கள் போபாலுக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : அரியலூர் மக்களை விடிய விடிய தூங்க விடாத முதலை.. பகீர் சம்பவம்!

மேலும் அலிகேட்டர் இன மீன்கள், மற்ற மீன்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. எனவே இந்த குளத்தில் மீன்கள் அதிக அளவில் உள்ளனவா? என்பது வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். வல்லுனர்களின் கூற்றுப்படி, அலிகேட்டர் மீன்களின் ஆயுட்காலம் 18-20 ஆண்டுகள் இருக்கக்கூடும்.

பொதுமக்கள் அச்சம்

சமீபத்தில் போபால் குளத்தில் கண்டறிப்பட்ட அலிகேட்டர் கர் மீன்களால் இதுவரை எவ்வித பாதிப்பும் இல்லையென்றாலும் இந்த மீன்களைப் பார்த்து மக்கள் அச்சத்தில் உள்ளனர். பொதுவாக இந்த வகை மீன்கள் பொதுவாக 12 அடி நீளம் இருக்கும். இதோடு மட்டுமின்றி மீன்களுக்கு கூர்மையான பற்கள் தவிர, கூர்மையான எலும்பு செதில்களும் உள்ளதால், குளத்தில் உள்ள மீன்களுக்கு மட்டுமில்லாது, மீன்பிடிக்க செல்லும் மக்களுக்கும் உடலில் கீறல்கள் மற்றும் பல்வேறு காயங்கள் ஏற்படக்கூடும்.

top videos

    இதன் காரணமாக தான் இந்த குளத்தில் இந்த ஒரு மீனைத்தவிர வேறு எதுவும் மீன்கள் அதிகளவில் உள்ளதா? என்பது குறித்து நிபுணர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வன நிர்வாகத்தின் கூற்றுப்படி, தற்போது போபாலில் முதன்முறையாக அலிகேட்டர் கார் மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றார்கள்.

    First published:

    Tags: Bhopal, Fish