தற்போது ஆர்டிஃபீஷியல் இன்டலிஜன்ஜஸ் (Artificial intelligence) சோஷியல் மீடியாவில் களைக்கட்டி வரும் சூழ்நிலையில், பல கலைஞர்கள் AI டூல்களைப் பயன்படுத்தி பல்வேறு வித்தியாசமான படைப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், கோகுல் பிள்ளை என்ற கலைஞர் மிகவும் விசித்திரமான முறையில் யோசித்து, பில்லியனர்கள் ஏழையாக இருந்தால் எப்படி இருப்பார்கள் என்பதற்கான படங்களை வெளியிட்டுள்ளார்.
அவர் பகிர்ந்து கொண்ட படங்களில் டொனால்ட் டிரம்ப், பில் கேட்ஸ், முக்கேஷ் அம்பானி, மார்க் சூக்கர்பெர்க், வாரன் பஃபெட், ஜெஃப் பெசாஸ் மற்றும் எலான் மஸ்க் ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கும். ஆர்டிஃபீஷியல் இன்டலிஜன்ஜஸ் என்பது மிகவும் அட்வான்ஸ்டாக இருப்பதால், அதிகம் கஷ்டப்படாமல் நமக்கு வேண்டியதை மிகவும் எளிதாக உருவாக்கிக் கொள்ளலாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவை பார்ப்பதற்கு அப்படியே உண்மையான ஒன்றைப் போலவே இருக்கும். ஆர்டிஃபீஷியல் இன்டலிஜன்ஜஸில் ஷேடிங் மற்றும் பிக்சல் ஆகியவை மிகவும் விரிவான முறையில் செய்யப்படுவதால் ஒருவரால் அது போலியானது என்று சொல்லவே முடியாது.
Read More : பாம்பின் தலையில் நாகமணி.!? வைரலாகும் போட்டோ... உண்மையில் நாகமணி என்பது உள்ளதா?
இந்த புகைப்படங்களுக்கு "ஸ்லம்டாக் மில்லியனர்கள். (இந்த பட்டியலில் நான் யாரையாவது மிஸ் பண்ணி விட்டேனா?)" என்ற தலைப்பு கொடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவை இன்ஸ்டாகிராமில் காண கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்:
View this post on Instagram
மிட்ஜெர்னி (Midjourney) என்ற ஆப்-ஐ பயன்படுத்தி கோகுல் உலகின் பணக்காரர்களை ஏழையாக காட்டியுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியூட்டும் விதமாக இருந்தாலும் பார்ப்பவரை பிரமிக்கவும் செய்கிறது.இந்த கலைஞர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் அனைத்துமே மிகவும் தத்ரூபமாக உள்ளன. ஒரு ஸ்லம் பகுதியின் முன் நிற்கும் உலகின் பணக்காரர்கள் கிழிந்த ஆடைகளுடன் காட்சி அளிக்கின்றனர். இந்த இன்ஸ்டாகிராம் பதிவானது 10,000 லைக்குகளை அள்ளிவிட்டது. அதோடு ஏராளமான நபர்கள் இது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
"படைப்பாற்றல் உடையதாகவும்_அழகாகவும் உள்ளது". என்று இன்ஸ்டாகிராம் பயனாளர் இதற்கு கருத்து கூறியுள்ளார். மேலும் ஒருவர் "இது தங்கம் போன்ற விலைமதிப்பற்றது! ஆனால் ஏழை போன்ற உடை அணிந்திருந்தாலும், எலான் மஸ்க் மட்டும் இன்னும் பணக்காரர் போலவே தெரிகிறார். " என்று பதிவிட்டுள்ளார். பலர் இதற்கு ஆச்சரியத்துடன் ரியாக்ட் செய்துள்ளனர், அதே சமயத்தில் பலர் இந்த கலைஞரின் கற்பனையான புகைப்படத்தைக் கண்டு சிரித்துவிட்டும் செல்கின்றனர்.
இதற்கு முன்பாக போப் ஃபிரான்சிஸ் ஒரு நீண்ட வெள்ளை பஃபர் ஜாக்கெட்டை அணிந்திருப்பது போன்ற ஒரு புகைப்படம் பகிரப்பட்டு டிரெண்டாகியது. 86 வயதான போப் ஃபிரான்சிஸ் ஸ்டைலாக இருப்பதை கண்டு பலர் பாராட்டினர். எனினும், அந்த புகைப்படம் போலியானது.வெள்ளை பஃபர் ஜாக்கெட்டை அணிந்திருப்பது போன்ற போப் ஃபிரான்சிஸின் புகைப்படமானது ஆர்டிஃபீஷியல் இன்டலிஜன்ஸ் மூலமாக மிட்ஜெர்னி பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.