பொதுவாக நள்ளிரவு நேரத்தில் தானே மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல அஞ்சுவார்கள். இங்கு ஓர் ஊரிலோ, மக்கள் விநோத காரணத்திற்காக நண்பகல் நேரத்தில் வெளியே செல்ல பயப்படுகின்றனர். நாம் வாழும் இடம் நமக்கு நிம்மதியையும் மன நிறைவையும் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும்.
ஆனால், பிரிட்டன் நாட்டில் ஒரு கிராமப்புற பகுதியில் மக்கள் பட்ட பகலிலேயே வெளியே செல்வதற்கு அஞ்சும் அவல நிலை உள்ளது. பொதுவாக நமது ஊர்களில் மத்திய நேரத்தில் உச்சி வெயிலில் வெளியே செல்ல வேண்டாம் என பேய், பூச்சாண்டிகளை காரணம் காட்டி தடுப்பதை பார்த்திருப்போம்.
அப்படித்தான், Pontypridd என்ற பிரிட்டனில் உள்ள ஒரு டவுனில் நண்பகல் வேளையில் யாரும் வெளியே செல்லக்கூடாது என்ற வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், பேயோ, பூச்சாண்டியோ இல்லை. அங்கு அதீத போதையில் வசிக்கும் குடிமகன்களின் அச்சுறுத்தல்தான் காரணம். இந்த டவுன் பகுதியில் பலரும் போதைக்கு அடிமையாகி தெருக்களில் அலைந்து திரிந்து அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் வன்முறையில் ஈடுபட்டு அச்சுறுத்துகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் இளைஞர்களே. இது போன்ற அச்சுறுத்தலான செயல்களில் ஈடுபட்டதாக கடந்த 3 மாதத்தில் மட்டும் 40 பேர் அங்கு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பயந்தே இங்கு வசிக்கும் மக்கள் நண்பகல் வேளைகளில் வெளியே செல்ல பயப்படுகின்றனர். தங்கள் வீட்டிலேயே தங்களை சிறைப்படுத்தி வசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கருவை கலைத்ததால் 4 வயது மூத்த காதலியை சுட்டுக்கொன்ற காதலன்... அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்..!
வசிப்பதற்கு அழகான இடமான தங்கள் ஊர் இவர்களால் வாழ தகுதி அற்ற பகுதியாக மாறிவிட்டதே என உள்ளூர் வாசிகள் வேதனை கொள்கின்றனர். இங்கு புதிய கடைகள், தொழில்சாலைகள் ஆகியவை வந்து வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற ஏக்கத்தில் மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். ஆனால், அதிகமாக வன்முறை சம்பவங்கள் நிகழும் இப்பகுதிக்கு தொழில் முதலீடு செய்ய யாரும் முன்வருவதில்லை எனக் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: UK, Viral News