முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / Watch : 25 வருடங்கள் கழித்து டேட்டிங் சென்ற 93 வயது பாட்டி... வருத்தத்துடன் திரும்பியது ஏன்?

Watch : 25 வருடங்கள் கழித்து டேட்டிங் சென்ற 93 வயது பாட்டி... வருத்தத்துடன் திரும்பியது ஏன்?

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

சமூக வலைத்தளத்தில் 93 வயதான பாட்டி அவரின் டேடிங் குறித்து வெளியிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சமூக வலைத்தளத்தில் 93 வயதான பாட்டி ஒருவர் தொடர்ந்து தனது அன்றாட வாழ்வியல் செயல்களை வீடியோவாக பதிவிட்டு வந்துள்ளார். அவரின் வீடியோக்கள் பலபேரின் கவனம் பெற்று ரசிக்கப்பட்டது.

இந்த நிலையில், தான் 25 வருடங்கள் கழித்து டேடிங் செல்லவுள்ளதாக ஒரு வீடியோவை பதிவிட்டார். அதில் அவர் தன்னுடைய ஆண்நண்பர் இன்னும் 20 நிமிடங்களில் தன்னை கூட்டி செல்லவரவுள்ளதாகவும், அதற்காகத் தான் அழகாகத் தயார் ஆகினேன் என்று கூறினார். ஒரு வேளை தனது ஆண்நண்பருக்கு முத்தம் கொடுக்க நேரிடும் என்று எதிர்பார்த்த அவர் லிப்சிடிக் போன்ற அலங்காரங்கள் செய்துகொண்டார். மேலும், தான் பணம் ஏதும் எடுத்து செல்லப்போவது இல்லை என்று கூறினார்.
 
View this post on Instagram

 

A post shared by Grandma Droniak (@grandma_droniak)அவரின் இந்த வீடியோவிற்கு பலரும் கமெண்டில் வாழ்த்துகள் தெரிவித்தனர். 93 வயதில் அவரின் இளமையான உணர்வுகளை நெட்டிசன் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.

இதனைத்தொடர்ந்து, அவர் ஆண்நண்பருடன் டேடிங் சென்று திரும்பிய பின் அந்த அனுபவத்தை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் வருத்தமாகப் பேசியுள்ளார். அந்த நபர் தன்னிடம் ஜெண்டில்மேன் போல் நடந்துகொள்ளவில்லை என்றும், அவர் தனக்காகக் கதவை திறந்து விடவில்லை என்று கூறியுள்ளார். மேலும், அவர் அழகாகவுள்ளதாகக் கூறவில்லை என்றும், ஹோட்டலில் இருந்த சர்வரிடம் மரியாதையுடன் நடந்துகொள்ளவில்லை என்றும் வருத்ததுடன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அதனால் அவரை முத்தமிடவில்லை என்று கூறினார்.
 
View this post on Instagram

 

A post shared by Grandma Droniak (@grandma_droniak)இதற்கு சமூக வலைத்தளம் மிகவும் மென்மையான முறையில் கருத்துகளை அளித்துள்ளது. அவரை ஊக்குவிக்கும் வகையில், அவர் வயதானாலும் அழகாகவுள்ளார் எனவும், எப்படி அவர் என்னுடைய பாட்டியிடம் இப்படி நடந்துகொள்ளலாம் என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டு வருகின்றனர். மேலும், ஒருவர், ”நல்லவேலை அவருக்காக உங்களுடன் லிப்சிடிக்கை வீணாக்கவில்லை” என்று நெகிழ்ச்சியாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Trending Video, Viral Video