முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / 35 வருட காதல் வாழ்க்கை..! காதலரை கரம் பிடிக்கும் 60 வயது பெண்மணி..

35 வருட காதல் வாழ்க்கை..! காதலரை கரம் பிடிக்கும் 60 வயது பெண்மணி..

மாதிரிப்படம்..!

மாதிரிப்படம்..!

60 வயது நிரம்பிய பெண்மணி தன்னுடைய காதலருடன் செப்டம்பர் 9ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளார். மேலும் அவர்களின் திருமண நாளில் போது ஆண்ட்ரியாவின் தந்தைக்கு 88 வயது பூர்த்தி அடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தனது காதலை காதலியிடம் வெளிப்படுத்தும் தருணம் அனைவருக்கும் மிகவும் ஸ்பெஷல் ஆன ஒன்றுதான். இதற்காக எதை வேண்டுமென்றாலும் செய்ய தயாராக பலரும் உள்ளனர். இவை அனைத்துமே இளமைப் பருவத்தில் அனுபவிக்க தவற கூடாத ஒன்றாகும். ஆனால் UK-வை சேர்ந்த 60 வயது பெண்மணி ஒருவருக்கு 35 வருட காதல் வாழ்க்கைக்கு பின்னர் அவருடைய காதலர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ப்ரொபோஸ் செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

35 வருடங்களாக திருமணத்திற்கு ஒத்து கொள்ளாத அவரது காதலர் கடைசியாக இப்போதுதான் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தனது காதலியுடன் மண்டியிட்டு வேண்டுகோள் வைத்துள்ளார். இவர்களது காதல் வாழ்க்கை 1988-ஆம் ஆண்டு தொடங்கியது. தற்போது 56 வயது ஆகும் இப்பெண்மணியின் காதலர் 28 வருடங்களுக்கு முன்பு இப்பெண்மணியிடம் காதலை தெரிவித்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்றும், தங்களது நிச்சயதார்த்தத்திற்காக மட்டும் ஒரு மோதிரத்தை வாங்கி பரிசளித்துள்ளார்.

மேலும் திருமணம் செய்து கொண்டு தான் காதலை நிரூபிக்க வேண்டும் இல்லை என்றும் உறவில் நமது அர்ப்பணிப்பே போதுமானது என்றும் அவர் கூறியுள்ளார். கிரஹாம் என்ற பெயர் கொண்ட இப்பெண்மணியின் காதலர் பல வருடங்களாக காதலுக்கு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது திடீரென மன மாற்றம் அடைந்து ஸ்காட்லாந்தின் லாசி மவுத் கடற்கரையில் தனது காதலியான ஆண்ட்ரியாவிடம் மண்டியிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் வைத்துள்ளார்.

மக்களே உஷார்… உங்களுக்கு தெரியாத நம்பரில் இருந்து அடிக்கடி வாட்ஸ்அப் வீடியோ கால் வருதா?... உடனே இதை செய்யுங்க!

ஆண்ட்ரியா சமையல் கலை நிபுணராக பணிபுரிந்து தற்போது ஓய்வில் இருக்கிறார். மேலும் தனது காதலரின் இந்த ப்ரோபோஸலை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதைப்பற்றி அவர் கூறுகையில், “இதை என்னால் சற்றும் நம்ப முடியவில்லை, என்னை நானே அவ்வபோது கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன். நாங்கள் கேரவனை நோக்கி செல்கிறோம் என்று நினைத்துதான் அங்கு சென்றோம் ஆனால் திடீரென்று அவர் எனக்கு முன்பு மண்டியிட்டு திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். இது மிகவும் ஸ்பெஷலான அதே சமயத்தில் ரொமான்டிக்கான தருணம்” என்று ஆண்ட்ரியா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் ஆண்ட்ரியாவிடம் இவ்வாறு கூறுவதற்கு முன்பே ஆண்ட்ரியாவின் தந்தையிடம் கிரஹாம் இதனை தெரிவித்துவிட்டதாக நன்றி கூறுகிறார். இதற்கு முன்பு பலமுறை ஆண்ட்ரியாவும் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் அனைவரும் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியபோதும், அவர் எப்போதும் தனது மனதை மாற்றியதில்லை. தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த திடீர் மன மாற்றம் மிகவும் மகிழ்ச்சியானது என்று அனைவரும் கூறுகின்றனர்.

top videos

    60 வயது நிரம்பிய அந்த பெண்மணி தன்னுடைய காதலருடன் செப்டம்பர் 9ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளார். மேலும் அவர்களின் திருமண நாளில் போது ஆண்ட்ரியாவின் தந்தைக்கு 88 வயது பூர்த்தி அடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களின் திருமணமானது அவரின் மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகள் என அனைவரின் முன்னிலையில் சிறப்பாக நடக்க உள்ளது.

    First published:

    Tags: Trending, Viral