முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / கோல்டு கலந்த டீ...இந்தியாவில் எங்கு கிடைக்கிறது தெரியுமா?

கோல்டு கலந்த டீ...இந்தியாவில் எங்கு கிடைக்கிறது தெரியுமா?

கோல்டு டீ

கோல்டு டீ

லக்னோவில் கோட்டு கலந்த டீ “24 கேரட் கோல்டன் டீ” என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

  • Last Updated :
  • Lucknow, India

பான் பர்கர்கள், ஃபாண்டா மேகி மற்றும் ரூஹாஃப்சா டீ முதல் பட்டர் சிக்கன் ஐஸ்கிரீம் வரை, வினோதமான உணவுப் பரிசோதனைகள் இப்போது முடிவில்லாத ட்ரெண்டாக மாறி வருகிறது. மேலும் சமூக ஊடகங்கள் இதுபோன்ற புது உணவுகளைக் கொண்டு வருகிறது. இப்படி நீண்ட ட்ரெண்டிங் உணவு பட்டியலில் இன்னொன்றைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். அது தான், “24-கேரட் கோல்டன் டீ”. லக்னோவில் உள்ள ஒரு கஃபேவில், பிரபலமான இந்திய பானத்திற்கு ஒரு ஆடம்பர தோற்றத்தைக் கொடுத்துள்ளனர். இந்த டீயின் மேல் உண்ணக்கூடிய தங்க லேயர் சேர்க்கப்பட்டுப் பரிமாறப்படுகிறது.

பொதுவாக நாம் சாப்பிடக் கூடியவற்றில், வெள்ளித் தாள்களில் சுற்றப்பட்ட இனிப்புகளை விற்பதை அடிக்கடி பார்த்திருப்போம். அதே போல தங்கத் தோசை கூட உண்டு. பானத்தில் இதுபோன்ற செய்ய முடியும் என்பது நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும். இந்த கோல்டன் டீ வீடியோ இணையத்தில் பரவி வந்தாலும், இது பயனர்களைக் கவரவில்லை என்றே கூறப்படுகிறது.

இப்போது வைரலான இந்த வீடியோவை லக்னோவைச் சேர்ந்த ஃபுட் வ்ளாகர் ஒருவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், ஒரு கப்பில் சூடான தேநீரை வடிகட்டுவதுடன் வீடியோ தொடங்குகிறது. அடுத்து, அவர் மேலே இருந்து இரண்டு ஸ்பூன் முழு கிரீமை சேர்க்கிறார். பின்னர் தேநீரில் தங்கத் தகடுகளை மேலே சேர்க்கிறார்.

இந்த வீடியோவை பார்க்கும் பலருக்கும் இந்த தேநீரின் விலை எவ்வளவு என்று தான் தோன்றும். 21 கேரட் கோல்டன் டீ என்று பெயரிடப்பட்ட இந்த டீயின் விலை 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இந்த கோல்டன் டீ பளபளப்பான முறையில் வழங்கப்பட்ட போதிலும், இதை பலரும் விரும்பவில்லை. இந்த வீடியோவின் கமெண்ட் பிரிவில் பலரும் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர், லக்னோவை விரும்பாததற்கு இதுபோன்ற சோதனைகள் தான் காரணம் என்று கூறியுள்ளனர். மேலும் சிலர் இந்த டீ எப்படி இருக்கும் என்று குழப்பமடைந்துள்ளனர்.

Also Read : கடக்கும் ரயில்களின் நீளத்தை கண்டுபிடிக்கும் வழி உங்களுக்குத் தெரியுமா?

top videos

    கடந்த ஆண்டு, முன்னாள் பாலிவுட் நடிகை சனா கான், துபாயில் 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட தேநீரை ருசிக்கும் படத்தைப் பகிர்ந்திருந்தார். இதில் சிறப்பு என்னவென்றால், அப்போது அவர் குடித்த கோல்டன் டீயின் விலை 160 திர்ஹாம்கள், அதாவது 3,300 ரூபாய் ஆகும். ஒரு டீ இவ்வளவு விலையா என்கிற உங்களின் அதிர்ச்சி கலந்த கேள்வியைத் தான் சனாவின் இந்த பதிவிற்கு கமெண்ட்களாக வந்திருந்தன.

    First published:

    Tags: Gold, Tea, Viral Video