மாணவர் ஒருவர் தன்னை விட 26 வயது அதிகமான ஆசிரியையை திருமணம் செய்து கொண்ட விசித்திர சம்பவம் மலேசியாவில் நிகழ்ந்துள்ளது. மலேசியாவின் பெல்டா ஏர் டவார் பகுதியில் வசிப்பவர் 22 வயதான முகமது டேனியல் அகமது அலி. இவர் 2016இல் உயர்கல்லி பயின்று வந்தார். அப்போது இவருக்கு மலாய் பாடம் நடத்து ஆசிரியையாக இருந்தவர் ஜமிலா.
அந்த காலத்தில் ஜமிலா மீது ஆசிரியை என்ற மரியாதை கலந்த அன்பு மட்டுமே மாணவர் முகமதுவிற்கு இருந்துள்ளது. அவர் மாணவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளும் விதம் முகமதுவை கவர்ந்துள்ளது. பின்னர் உயர் வகுப்புகளுக்கு சென்ற பின்னர் இருவருக்குமான தொடர்பு நின்றுபோனது.
அப்படி இருக்கத்தான் ஒரு நாள், இவர் ஆசிரியர்கள் இருக்கும் அறையில் முகமது சென்றுள்ளார். அப்போது எதேச்சையாக ஜமிலாவை பார்த்து வணக்கம் தெரிவித்துள்ளார். பின்னர் தான் ஜமிலா மீது முகமதுவிற்கு ஈர்ப்பு வந்துள்ளது. மெல்ல அவரிடம் பேச ஆரம்பித்து சாட்டிங், பிறந்த நாள் வாழ்த்து போன்று உரையாடலை தொடங்கினார். ஒரு கட்டத்தில் தனது மனதை திறந்த ஜமிலாவிடம் காதலை வெளிப்படுத்தினார் முகமது.
ஆனால் அவரது காதலை ஜமீலா உடனடியாக நிராகரித்தார். காரணம் இருவரின் வயது. ஜமீலாவை விட டானியல் 26 வயது இளையவர், அத்துடன் ஆசிரியையாக இருந்தவர். மேலும், ஏற்கனவே திருமணமான ஜமிலா 2007ஆம் ஆண்டில் இருந்து கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: செலவு செய்த பணத்தில் பாதியை தர வேண்டும் - முன்னாள் காதலிக்கு கெடு விதித்த காதலன்
இருப்பினும் முகமது விடாமல் தனது அன்பை பொழியவே ஜமிலா அதற்கு ஒப்புக்கொண்டார். தொடர்ந்து இருவரும் குடும்பத்தினரின் அனுமதி பெற்று திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி 22 வயதான முகமது தனது 48 வயது ஆசிரியையை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடியின் செய்தியானது சமூக வலைத்தளங்களில் தற்போது டிரெண்டாக பரவி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.