நம் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ளது, வேலைக்காகவும் நல்ல சம்பளத்திற்காகவும் மக்கள் எங்கும் செல்லத் தயாராக உள்ளனர். ஆனால் 2 கோடி ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். ஆனால் அதற்கான நிபந்தனைகளால் அந்த வேலை வாய்ப்பை பயன்படுத்த மக்கள் ஆழ்ந்து யோசிக்கிறார்கள்.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, இந்த வேலை சீனாவில் இருக்கிறது. ஷாங்காய் நகரத்தில் வசிக்கும் ஒரு பெண் தனக்கென ஒரு தனிப்பட்ட பணிப்பெண்ணை தேடுகிறார். அவர் 24 மணிநேரமும் தன்னை கவனித்துக்கொள்ள வேண்டும். இந்த பணிக்காக, மாதந்தோறும் ரூ.16 லட்சத்துக்கும் மேல் சம்பளம் வழங்கப்படும்.
இந்தப் வேலைக்கான விளம்பரம் செய்தித்தாளில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பணிப்பெண்ணுக்கு மாதத்திற்கு ரூ.1,644,435.25 அதாவது ஒரு வருடத்திற்கு ரூ.1.97 கோடி எஜமானியிடமிருந்து வழங்கப்படும். இந்த வேலைக்கு, விண்ணப்பதாரர் 165 செ.மீ உயரமும், எடை 55 கிலோவுக்கும் குறைவாகவும் இருக்க வேண்டும். அவர் 12 அல்லது அதற்கு மேல் படித்திருக்க வேண்டும். தோற்றத்தில் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும், ஆடவும் பாடவும் தெரிந்திருக்க வேண்டும். ஹவுஸ் கீப்பிங் சர்வீஸ் கொடுத்துள்ள இந்த விளம்பரம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால், பணிப்பெண் தேவைப்படும் பெண்ணுக்கு, ஏற்கனவே 2 பணிப்பெண்கள் தலா 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். அவர்களும் அதே சம்பளத்தைப் பெறுகிறார்கள்.
இவ்வளவு சம்பளம் கொடுத்தும் ஏன் இந்த வேலைக்கு செல்ல பலரும் யோசிக்கிறார்கள் என்றால், இந்த பணியில் சுய மரியாதையை இழப்பதாக பலரும் உணர்கிறார்களாம்.
இது குறித்து பேசியுள்ள அவர்கள், எஜமானியின் காலில் இருக்கும் காலணிகளைக் கழற்றிப் போடும் வேலையைச் செய்ய வேண்டியிருக்கிறது, ஜூஸ், பழம், தண்ணீர் என்று எப்பொழுது கேட்டாலும் கொடுக்க வேண்டும். அவர் வருவதற்கு முன், வாசலில் காத்திருக்க வேண்டும் மற்றும் அவர் கை அசைவு கொடுத்ததும் அந்தப் பெண்ணின் ஆடைகளையும் மாற்ற வேண்டும் என இப்படியான வேலைகளே இருப்பதால் யோசிக்க வேண்டி இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.