இங்கிலாந்தின் மிகப்பெரிய சிறைச்சாலையான எச்எம்பி பெர்வின் சிறைச்சாலையில் சுமார் 2,100 ஆண் கைதிகள் உள்ளனர். இங்கு 500 காவலர்கள் பாதுகாப்புப் பணிக்காக உள்ளனர். இவர்களில் சில பெண் காவலர்கள், ஆண் கைதிகளுடன் நெருக்கமான உறவில் இருந்துள்ளனர். சிலரின் நெருக்கமான புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
18 பெண் காவலர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதர 15 பேரை பணியிலிருந்து நீக்கியுள்ளனர். விசாரணையில், கைதிகள் உள்ள செல் உள்ளே பாலியல் தொடர்பில் ஈடுபட்டது, செல் போன்கள் மூலம் நெருக்கமாகப் பேசுவது மற்றும் புகைப்படங்களை அனுப்புவது போன்ற விவரங்கள் வெளியில் வந்துள்ளது.
Also Read : நதியில் கோடிக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்....வைரலான வீடியோ..
எச்எம்பி பெர்வின் என்ற மிகப் பெரிய சிறைச்சாலை இது போன்ற சம்பவம் நடந்தது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளதாகி உள்ளது. தொடர்ந்து, இந்த சிறைச்சாலை கைதிகளுக்குத் தண்டனை வழங்கும் இடம் போல் இல்லாமல் வசதியாகச் சொகுசாக வாழும் இடமாக இருக்கிறது என்று பொதுமக்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.