முகப்பு /திருவாரூர் /

பறை இசைத்து, பாடல் பாடி திருவாரூரில் மஞ்சப்பை விழிப்புணர்வு!

பறை இசைத்து, பாடல் பாடி திருவாரூரில் மஞ்சப்பை விழிப்புணர்வு!

X
மீண்டும்

மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு

Thiruvarur Manjappai awareness: பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதார சீர்கேடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவாரூரில் நிகழ்ச்சி நடைபெற்றது.

  • Last Updated :
  • Thiruvarur, India

பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.அந்த வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனம் கலைக்குழு இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தின் மூலம் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

அதில் 10 க்கும் மேற்பட்ட வனம் கலைக்குழுவின் தன்னார்வலர்கள் பறை இசைத்தும்,பாடல் பாடியும், நடனங்கள் ஆடியும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள நடத்தினார் .

இதில் பொதுமக்கள் கடைவீதிகளுக்கு செல்லுகையில் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து துணி பைகள் மஞ்சப்பைகளை பயன்படுத்த வேண்டும் , பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதால் நிலம் நீர் போன்றவைகளில் ஏற்படும் மாசுகள் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Thiruvarur