ஹோம் /திருவாரூர் /

திருவாரூர் மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு

மின்தடை

மின்தடை

Thiruvarur District | திருவாரூர் மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பவர் கட் செய்யப்படும் பகுதிகள், நேரம் ஆகியவை பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் நாளை (நவம்பர் 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணிகள் நடக்க இருக்கின்றன. இவை சரி செய்யப்பட்ட பின்னர் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

எனவே, இந்த பகுதி பொதுமக்கள் மின்தடை செய்யப்படும் நேரங்களில், மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் தங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read :ஜோத்பூர் பேலஸ் போன்ற கலைநயம், கண்களை கவரும் சுவரோவியங்கள்... இது நம்ம போடிநாயக்கனூர் அரண்மனை!

மின்தடை பகுதிகள்:

நன்னிலம், ஏனங்குடி, கங்களாஞ்சேரி, ஆனைகுப்பம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நன்னிலம், நல்லமாங்குடி, வடகுடி, கம்மங்குடி, குளக்குடி, ஆலங்குடி, முடிகொண்டான், திருக்கண்டீஸ்வரம், சோத்தகுடி, தூத்துக்குடி, சன்னாநல்லூர், பனங்குடி, ராசாகருப்பூர், மூலமங்கலம், ஆண்டிப்பந்தல், குவளைக்கால், விசலூர், மூங்கில்குடி, காக்காகோட்டூர், ஆனைகுப்பம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல, மாப்பிள்ளைகுப்பம், சலிப்பேரி, தட்டாத்திமூலை, கீழ்குடி, சிகார்பாளையம், நாடாகுடி, வீதிவிடங்கன், பூங்குளம், புளிச்சக்காடி, ஏனங்குடி, புத்தகரம், வவ்வாலடி, ஆதலையூர், பாக்கம் கோட்டூர் ஆகிய பகுதிகளுக்கும், அதை சுற்றி உள்ள பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது என திருவாருர் மின்வாரிய செயற்பொறியாளர் பிரபா தெரிவித்திருக்கிறார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Thiruvarur