முகப்பு /திருவாரூர் /

திருவாரூர் மாவட்டத்தில் பவர்கட்.. நாளை இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு..

திருவாரூர் மாவட்டத்தில் பவர்கட்.. நாளை இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு..

மின்தடை

மின்தடை

Power Shutdown in Thiruvarur : திருவாரூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (20-05-2023) மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் துணை மின் நிலையத்திலிருந்தும் மற்றும் கப்பல் நகர் துணை மின் நிலையத்திலிருந்தும் மின்சாரம் பெறும் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (20.05.2023) இந்த பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று திருவாரூர் உதவி செயற்பொறியாளர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மின் தடை பகுதிகள் 

திருவாரூர் பகுதியில் கப்பல் நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் திருவாரூர் நகர், தெற்கு வீதி, பனகல் சாலை விஜயபுரம் தஞ்சை சாலை விளமல், கொடிக்கால் பாளையம், மாங்குடி,கூடூர், மாவூர், முகந்தனூர், திருப்பத்தங்குடி மற்றும் அடியேக்கமங்கலம் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் அடியக்கமங்கலம், EB காலனி, சிதம்பரநகர் மின் விநியோகம் இருக்காது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல் விலாவடிமூலை, ஆந்தகுடி, புலிவலம், அலிவளம், தப்பலாம்புலியூர்,புதுப்பத்தூர், நீலப்பாடி, கீழ்வேளூர், கொரடாச்சேரி, மற்றும் இப்பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்கள் ஆகிய இடங்களில் நாளை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Tiruvarur