முகப்பு /திருவாரூர் /

Tiruvarur | சிகிச்சைக்கு செல்லவே பயமா இருக்கு... இடிந்து விழ காத்திருக்கும் கால்நடை மருத்துவமனை கட்டிடம்

Tiruvarur | சிகிச்சைக்கு செல்லவே பயமா இருக்கு... இடிந்து விழ காத்திருக்கும் கால்நடை மருத்துவமனை கட்டிடம்

இடிந்து விழும் நிலையில் கால்நடை மருத்துவமனை

இடிந்து விழும் நிலையில் கால்நடை மருத்துவமனை

Tiruvarur | திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த கால்நடை மருத்துவமனைக் கட்டடத்தை புனரமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் அருகே உள்ள கூத்தாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்களின் பிரதான தொழில் விவசாயம் தான். விவசாயத்திற்கும் மற்றொரு வருவாய் தேவைக்கும் கிராம மக்கள் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். மாடு, ஆடு, வாத்து உள்ளிட்டவைகள் இதில் அடக்கம்.

விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு நோய் வந்தால் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக கூத்தாநல்லூரில் கால்நடை மருத்துவமனையானது 2002 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு லட்சுமாங்குடி, மரக்கடை, மஞ்சுனகுடி, வேற்குடி, வேளுக்குடி, மணக்கரை, பண்டிதக்குடி, திருராமேஸ்சுவரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள், தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளை பராமரிக்க மற்றும் நோய்களை குணமாக்க இந்த மருத்துவமனையை நாடுவார்கள்.

மோசமான நிலையில் கால்நடை மருத்துவமனை 

இந்நிலையில் இந்த கால்நடை மருத்துவமனை கட்டிடமானது சேதமடைந்து மிகவும் மோசமாக நிலையில் உள்ளது. கட்டிடத்தின் உள்ளேயும், வெளியேயும் பல்வேறு இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய அபாய நிலையில் உள்ளது. இதனால் இந்த கால்நடை மருத்துவமனையை பயன்படுத்தவே கிராம மக்கள் அஞ்சுகின்றனர்.

மோசமான நிலையில் கால்நடை மருத்துவமனை

இதுகுறித்து பேசிய கூத்தாநல்லூர் பகுதி மக்கள், ’இந்த கூத்தாநல்லூர் பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. எங்களுக்கு விவசாயமே பிரதான தொழில். விவசாயத்திற்கு உதவக்கூடிய ஆடு, மாடு போன்ற கால்நடைகளை நாங்கள் வளர்த்து வருகிறோம். அவற்றிற்கு ஏதாவது நோய் ஏற்பட்டால், கூத்தாநல்லூர் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வந்தது தான் சிகிச்சை பெறுவோம். ஆனால், தற்போது இந்த கால்நடை மருத்துவ கட்டிடம் சேதமடைந்து மிகவும் மோசமாக உள்ளது.

இதனால் நாங்கள் எங்களது ஆடு, மாடுகளை இந்த கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்கே மிகவும் அஞ்சுகிறோம்.

இந்த கட்டிடம் இப்படி இருப்பதால், நாங்கள் எங்கள் கால்நடைகளை இங்கு அழைத்து வர பயந்து, எங்களது ஊர்களிலேயே கை வைத்தியம் பார்க்க கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இதனால் அவ்வப்போது எங்கள் கால்நடைகள் செத்தும்போகிறது. எங்களுக்கு உதவியாக இருக்கும் இந்த கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை புனரமைத்தால் எங்களுக்கு பேருதவியாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடையாக மருத்துவமனை கட்டிடத்தை புனரமைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

First published:

Tags: Local News, Tiruvarur