முகப்பு /செய்தி /திருவாரூர் / கோயில் திருவிழா.. தண்டவாளத்தில் படுத்து தூக்கம்.. ரயில் மோதியதில் 3 வாலிபர்கள் பலி!

கோயில் திருவிழா.. தண்டவாளத்தில் படுத்து தூக்கம்.. ரயில் மோதியதில் 3 வாலிபர்கள் பலி!

சம்பவம் நடந்த இடம்

சம்பவம் நடந்த இடம்

Tiruvarur Train Accident | ரயில் சத்தம் கேட்காமல் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ரயில் மோதியது

  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தண்டவாளத்தில் படுத்து தூங்கிய போது ரயிலில் அடிபட்டதில், மூன்றாவது நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உப்பூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை ஒட்டி, நேற்றிரவு காவடி எடுத்தல், சாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், உள்ளூரை சேர்ந்த 17 வயதான அருள்முருகதாஸ் மற்றும் பரத் , நாகையை சேர்ந்த 24 வயதான முருகபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர், அருகில் இருந்த ரயில்வே தண்டவாளத்தில் படுத்து தூங்கினர்.

அப்போது அதிகாலை 3 மணியளவில் அவ்வழியாக தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில் வந்தது. ஆனால், ரயில் சத்தம் கேட்காமல் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ரயில் மோதியதில், அருள்முருகதாஸ் மற்றும் முருகபாண்டியன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: 12 மணி நேர வேலை மசோதா- இன்று முதல்வரைச் சந்திக்கும் கூட்டணி கட்சித் தலைவர்கள்

படுகாயமடைந்த பரத், ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

top videos
    First published:

    Tags: Local News, Tiruvarur