முகப்பு /செய்தி /திருவாரூர் / திருவாரூரில் உலகப் புகழ்பெற்ற ஆழித்தேரோட்டம்... தேரை வடம்பிடித்து இழுக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்..!

திருவாரூரில் உலகப் புகழ்பெற்ற ஆழித்தேரோட்டம்... தேரை வடம்பிடித்து இழுக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்..!

திருவாரூரில் உலகப் புகழ்பெற்ற ஆழித்தேரோட்டம்... தேரை வடம்பிடித்து இழுக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்..!

திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயிலில் உலகப் புகழ்பெற்ற ஆழித்தேரோட்டம் விமர்சையாக நடைபெற்று வருகிறது.

  • Last Updated :
  • Thiruvarur, India

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை மிக்க திருவாரூர் தேர் 96 அடி உயரம் கொண்டது. மொத்த எடை 300 டன் ஆகும். பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று, அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

இன்று ஒரே நாளில் விநாயகர், முருகன், தியாகராஜர், அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட ஐந்து தேர்களும் வீதி உலா வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆழித்தேரோட்டத்தை ஒட்டி, ஆயிரத்து 535 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேரோடும் வீதி உள்ளிட்ட பகுதிகளில் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

top videos
    First published:

    Tags: Festival, Thiruvarur