திருவாரூர் என்றாலே அனைவரின் ஞாபகத்திற்கு வருவது ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழித்தேர் தான், திருவாரூர் தியாகராஜர் திருகோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சப்த விடங்க தலங்களில் முதன்மையானதாகவும் விளங்கிறது.
இந்த கோவில் ஆழித்தேர் ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது. அதனுடன் மற்றொரு சிறப்பு இந்த கோவிலின் தெப்பத் திருவிழாவாகும். திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத்தின் நீளம் 50அடி, அகலம் 50 அடி ஆகும். உயரம் சுமார் 30 அடி. இதில் 2 அடுக்குகளாக தண்ணீரில் மிதக்கக்கூடிய 432 காலி பேரல்களில் காற்று நிரப்பி கட்டப்பட்ட தெப்பத்தில் சுமார் 500 பேர் ஏறி செல்லும் வகையில் பிரமாண்டமாக இந்த தெப்பம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தெப்பம் கட்டுமான பணிகளில் சுமார் ஒரு நாளில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்கு மேலாக ஈடுபட்டு வருகின்றனர்.
தெப்பதிருவிழாவின் முதல் நாள் அன்று இரவு 7.30 மணிக்கு திருவாரூர் துர்க்காலயா சாலையில் உள்ள தெப்ப மண்டபத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் பார்வதி கல்யாணசுந்தரர் புறப்பட்டு கமலாலயம் குளத்தை வந்தடைவார். அங்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமி எழுந்தருளி விடிய விடிய தெப்ப திருவிழா நடக்கும். தெப்பம் குளத்தை 3 முறை சுற்றி வரும். ஒரு முறை சுற்றி வர 3 மணி நேரம் வரை ஆகும்.
இந்த ஆண்டு ஆழித்தேரோட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி நடந்தது. தேரோட்டத்தை தொடர்ந்து பார்வதி சமேத கல்யான சுந்தரர் திருக்குளத்தில் எழுந்தருளும் 3 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. அதன் படி இந்த ஆண்டிற்கான தெப்பதிருவிழா வருகிற 25-ந்தேதி, 26-ந் தேதி, 27-ந்தேதி ஆகிய 3 நாட்கள் நடக்கிறது. இந்த தெப்ப திருவிழாவிற்கு பக்தர்கள் திருவாரூர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கானோர் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
22 ஆண்டுகளாக இந்த தெப்பம் கட்டும் பணியில் ஈடுபட்டு வரும் கட்டுமான பணியாளர் செல்வம் கூறுகையில், 10 டன் எடை தாங்க கூடிய அளவிலான பாரல்கள் பொருத்தப்பட்டு வருகிறது. மரம் சார்ந்த தச்சு வேலையில் ஈடுபடும் தொழிலாளர்கள் கட்டுமானங்களை பலப்படுத்துவதற்காக மூங்கில் கொண்டு பலப்படுத்துகின்றனர். இதற்கு மேலாக கோவிலின் அமைப்பு போன்ற தெப்பமானது வடிவமைக்கப்படுகிறது. 600 முதல் 700 நபர்கள் அமர்ந்து செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்படுகிறது
ஆசியாவின் மிகப்பெரிய தெப்பம் என்பதால் பல்வேறு வெளி மாநிலங்களை சார்ந்தவர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் தெப்பம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பது பார்பதற்கு மிக அழகாக உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thiruvarur