ஹோம் /திருவாரூர் /

திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகை பற்றிய விவரங்கள்- உடனே விண்ணப்பியுங்கள்!

திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகை பற்றிய விவரங்கள்- உடனே விண்ணப்பியுங்கள்!

மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகள்

Thiruvarur District | திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு ஓர் ஆண்டுக்கான கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ரூ. ஆயிரம், 6 வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.3 ஆயிரம், 9 வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.4 ஆயிரம், இளங்கலை பட்டப்படிப்பிற்கு ரூ.6 ஆயிரம், முதுகலை பட்டப்படிப்பு, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் மற்றும் பொறியியல் தொழிற்கல்விக்கு ரூ.7 ஆயிரம் ஓராண்டிற்கு கல்வி உதவி தொகையாக வழங்கப்படுகிறது.

பார்வையற்றோருக்கு வாசிப்பாளர் உதவி தொகையாக ஆண்டு ஒன்றுக்கு 9 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.3 ஆயிரம், இளங்கலைபட்டப்படிப்பிற்கு ரூ.5 ஆயிரம், முதுகலை பட்டபடிப்பு மற்றும் தொழில்நுட்ப கல்விக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.

Must Read : திருச்சிக்கு நடுவில் இப்படி ஒரு அருவி இருக்கா?! - செலவே இல்லாமல் ஆனந்த குளியலுக்கு ஏற்ற சுற்றுலா தலம்!

2021-22 நிதியாண்டு திட்டத்தின் கீழ் பயனடைய அரசு பள்ளிகள், கல்லூரிகள், அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், தொலைதூர கல்வி, பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் முந்தைய கல்வி ஆண்டு இறுதி தேர்வில் குறைந்தபட்சமாக 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

எனவே மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், ஆதார் அட்டை நகல், மாணவர் பிறதுறைகளில் கல்வி உதவி தொகை ஏதும் பெறவில்லை என்று தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடம் சான்றிதழ், கடந்த ஆண்டு மதிப்பெண் சான்றுநகல் (9-ம் வகுப்புக்குமேல்) அளிக்கப்படவேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த விண்ணப்பங்கள் நவம்பர் மாத இறுதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Physically challenged, Thiruvarur