முகப்பு /திருவாரூர் /

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் திருவாரூர் மாவட்ட அரசு பள்ளி மாணவி!

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் திருவாரூர் மாவட்ட அரசு பள்ளி மாணவி!

X
அமெரிக்காவுக்கு

அமெரிக்காவுக்கு செல்லும் திருவாரூர் மாணவி

Thiruvarur District Government School : திருவாரூர் மாவட்டம் கல்யாணமகாதேவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சாதனா 8ம் வகுப்பு பயின்று வருகிறார்.

  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டம் கல்யாணமகாதேவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் மாணவி சாதனா, இலக்கிய திருவிழாவில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து தமிழக அளவில் சிறப்பிடம் பெற்றமைக்காக அமெரிக்கா செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட கலை இலக்கிய திருவிழாவில் விளையாட்டு, ஓவியம், பாட்டு, பேச்சு என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெற்றி பெற்றவர்கள் 7 நாட்கள் கல்வி சுற்றுலாவாக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 18 மாணவர்கள் கல்வி சுற்றுலாவுக்கு சென்னை சென்று வந்தனர்.

இவர்களில் பல்வேறு மதிப்பீடுகளின்படி முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இந்த 3 பேரில் ஒருவராக அமெரிக்கா செல்ல சாதனா தேர்வாகி இருக்கிறார். சிறுமி சாதனாவின் பெற்றோர் இருவரும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவுக்கு செல்லும் திருவாரூர் மாணவி

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்காக இலக்கிய மன்ற விழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த சிறுமி சாதனா, கல்யாண மகாதேவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவியாவார்.

அமெரிக்கா செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளதற்காக சிறுமி சாதனாவை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், உள்ளூர் பிரமுகர்களும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Tiruvarur