ஹோம் /திருவாரூர் /

சாலை வசதியில்லாத வேலைவாய்ப்பு அலுவலகம்... திருவாரூரில் தினம் தினம் அவதிப்படும் இளைஞர்கள்...

சாலை வசதியில்லாத வேலைவாய்ப்பு அலுவலகம்... திருவாரூரில் தினம் தினம் அவதிப்படும் இளைஞர்கள்...

சாலை வசதியில்லாத வேலைவாய்ப்பு அலுவலகம்

சாலை வசதியில்லாத வேலைவாய்ப்பு அலுவலகம்

Tiruvarur District News : திருவாரூரில் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்ல சரியான சாலை வசதி இல்லாததால் 5 ஆண்டுகளாக  நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Thiruvarur, India

  2016ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஒன்றரை கோடி மதிப்பீட்டில் திருவாரூர் மாவட்டத்தின் தண்டலை ஊராட்சி பகுதியில் ஒருவேலை வாய்ப்பு அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.

  இங்கு நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வந்து செல்கின்றனர். மேலும்,அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடப்பதால், பல மாணவர்களும் இங்கு வந்து செல்கின்றனர்.

  ஆனால், இந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு ஐந்தாண்டுகளுக்கு மேலாகியும் சரியான சாலை வசதி என்பதே கிடையாது. மேலும், தற்போது பெய்த கனமழையால் அந்த அலுவலகத்திற்கு இருந்த மண் சாலையும் சேரும் சகதியுமாக மாறியது.

  சாலை வசதியில்லாத வேலைவாய்ப்பு அலுவலகம்

  உடனடியாக திருவாரூர் மாவட்ட நிர்வாகம் இந்த வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு முறையான சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அலுவலகத்தைப் பயன்படுத்தும் பட்டதாரிகளும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இதையும் படிங்க : ரூ.15000 சம்பளத்தில் 108 ஆம்புலன்ஸில் வேலை வாய்ப்பு, தகுதிகள் என்ன? - திருவாரூரில் நேர்முகத்தேர்வு தேதி அறிவிப்பு

  இதுதொடர்பாக அலுவலகத்தை பயன்படுத்தும் மாணவர்கள் கூறுகையில், “இந்த திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமானது சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சரியான சாலை வசதி இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் எங்களை போன்ற மாணவர்களும், பட்டதாரிகளும் பெரிதும் பாதிக்கப்படுகிறோம்.

  இந்த அலுவலக கட்டிடத்தில் தான் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடப்பதால் நாங்கள் தினமும் இங்கு வந்து செல்கிறோம். ஆனால், இந்த அலுவலகத்திற்கு இருந்த மண் சாலை கூட தற்போது பெய்த கன மழையால் சேறும் சகதியுமாக மாறி உள்ளது.

  சாலை வசதியில்லாத வேலைவாய்ப்பு அலுவலகம்

  இதனால் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி இந்த அலுவலகத்திற்கு வரக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதுமட்டுமின்றி திருவாரூர் மாவட்டத்தின் மருத்துவ கிடங்கு, மாவட்ட டாஸ்மாக் குடோன் போன்ற மிக முக்கியமான அலுவலகங்கள் இந்த பகுதியில் தான் அமைந்துள்ளன.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  ஆதலால், உடனடியாக திருவாரூர் மாவட்ட நிர்வாகம் இந்த திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சரியான சாலை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Tiruvarur