2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு பட்ஜெட் அறிக்கையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (SC/ST) தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம்: என்ற புதியத் திட்டம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு அதனைத் தொடர்ந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்கள் (SC/ST) தொழில் தொடங்கும் ஆரம்ப அமைவு கட்டத்தில் எதிர்கொள்ளும் நிதிச்சுமையை தணிப்பது மற்றும் தேவையான வளங்களைப் பெறுவதை எளிதாக்குவது இத்திட்டத்தின் நோக்கம். மேலும் தொழில் முனைவோர்களின் ஒட்டுமொத்த செலவை கணிசமாக குறைத்து தொழில் முனைவோர்கள் தங்கள் வணிகத்தில் ஆர்வமுடன் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும் இத்திட்டம் பேருதவியாக இருக்கும்.
இத்திட்டத்தில் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கான கடனுக்கு 35% சதவீத மூலதன மானியமும் 6% சதவீத வட்டி மானியமும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வியாபாரம், சேவைத் தொழில்கள் மற்றும் உற்பத்தி ஆகிய தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
நேரடி விவசாயம் சார்ந்த தொழில்கள் மேற்கொள்ள இத்திட்டத்தில் வழிவகை இல்லை. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வித் தகுதி தேவையில்லை, வயது வரம்பு 55 வரை.
இத்திட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் ஏற்கனவே செயல்படுத்தப்படும் தொழில்களின் விரிவாக்கத்திற்கும் கடன் வழங்கப்படும். வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு இயந்திரங்கள், நிலம், சோதனைக்கருவிகள், கணினி சார்ந்த பொருட்கள் மற்றும் தொழில் சார்ந்த வாகனங்கள் வாங்கவும் இத்திட்டத்தில் மானியத்துடன் கடன் வழங்கப்படும்.
ALSO READ | பிரம்மாண்டமாக தயாராகும் தெப்பம்.. வியப்பில் ஆழ்த்தும் திருவாரூர் தெப்பத்திருவிழா!
மேற்காணும் இத்திட்டத்தில் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் https://www.msmeonline.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட பெருந்திட்ட வளாகம், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகில், விளமல், திருவாரூர் மாவட்டம் என்ற முகவரியில் நேரிலோ 9003654894 மற்றும் 8300943036 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Govt Scheme, Local News, SC / ST Act, Thiruvarur