ஹோம் /திருவாரூர் /

திருவாரூரில் சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டம் நடத்திய கிராம மக்கள்

திருவாரூரில் சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டம் நடத்திய கிராம மக்கள்

சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

Tiruvarur District News : கிராமத்தில் வசிக்க கூடிய மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு சென்று கல்வி கற்க கூடமுடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Thiruvarur, India

  திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ளது அன்னியூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் கிட்டத்தட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த அன்னியூர் ஊராட்சியில் வசித்து வருகின்றன.

  10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஊராட்சியின் சாலையானது பழுதடைந்து சேரும், சகதியுமாக இருந்து வருகிறது. இதனால் இந்த ஊராட்சியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

  அவசர தேவைகளுக்கு கூட மக்கள் யாருமே பயன்படுத்த முடியாத நிலையில் இந்த அன்னியூர் ஊராட்சியின் சாலைகள் உள்ளன. கிராமத்தில் வசிக்க கூடிய மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு சென்று கல்வி கற்க கூடமுடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

  இதையும் படிங்க : திருவாரூர் மாவட்ட கல்லூரி மாணவ - மாணவிகளே... இந்த வாய்ப்பை தவறவிடாதீங்க!

  தங்களது கிராமத்திற்கு சாலை வசதி கேட்டு பலமுறை அரசாங்கத்திற்கு மனுக்களை கிராம மக்கள் அனுப்பியும் அரசு தரப்பிலிருந்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் ஆத்திரமடைந்த அன்னியூர் கிராம மக்கள் இந்த பழுதடைந்த சாலையில் விவசாய நாற்றுகளை நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  போரட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறும்போது, “எங்களது அன்னியூர் ஊராட்சிக்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக சரியான சாலை வசதி என்பதே கிடையாது.

  மெயின் ரோட்டிலிருந்து எங்கள் கிராமத்திற்கு வரக்கூடிய இந்த சாலையானது சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு பழுதடைந்து, சேரும் சகதியுமாக உள்ளது.

  எங்கள் ஊரில் இருக்கக்கூடிய பொதுமக்கள் யாருமே நடந்து கூட, செல்ல முடியாத அளவுக்கு இந்த சாலையானது மிக மோசமாக உள்ளது. மேலும்,எங்களது ஊரில் வயதானவர்கள் யாராவது நோய்வாய்ப்பட்டால், ஆம்புலன்ஸ் கூட வர முடியாத அளவுக்கு இந்த சாலையானது இருந்து வருகிறது.

  எங்களது பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கே மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். நாங்களும் எத்தனையோ முறை திருவாரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு

  சாலை வசதி கேட்டு மனுக்களை அனுப்பி விட்டோம்.

  ஆனால் அரசாங்க தரப்பிலிருந்து இதுவரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

  இதையும் படிங்க : 24 மணிநேரமும் பெட்டிக்கடையில் கிடைக்கும் அரசு மதுபானம்.. கண்டுகொள்ளாத காவல்துறை.!

  இதனால் தான், நாற்று நாட்டு விவசாயம் செய்யும் அளவிற்கு எங்கள் ஊர் சாலை சேறும் சேகதியுமாக உள்ளது என்பதை அடையாளப்படுத்தும் விதமாக சாலையில் நாற்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டோம்.

  உடனடியாக மாவட்ட நிர்வாகம் எங்களது அன்னியூர் ஊராட்சிக்கு சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். எனவே, இனியாவது ஊராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் உடனடியாக இந்த கிராமத்திற்கு சாலைகளை அமைத்து தர வேண்டும்” என்று கோரிக்கை வைக்கின்றனர்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Tiruvarur