ஹோம் /திருவாரூர் /

”பேருந்து நிலையம் இருக்கு ஆனா இல்ல” - ஆதங்கப்படும் திருவாரூர் மாவட்ட மக்கள் 

”பேருந்து நிலையம் இருக்கு ஆனா இல்ல” - ஆதங்கப்படும் திருவாரூர் மாவட்ட மக்கள் 

சிதிலமடைந்து உள்ள பேருந்து நிலையம்

சிதிலமடைந்து உள்ள பேருந்து நிலையம்

Thiruvarur News : கூத்தாநல்லூர் நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைத்துத்தர அப்பகுதி மக்கள் கோரிக்கை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கூத்தாநல்லூர் நகராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 25வருடங்களுக்கு மேலாக கூத்தாநல்லூர் பகுதிக்கு பேருந்து நிலையம் இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

1998 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி அவர்களால் கூத்தாநல்லூர் பகுதியில் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பேருந்து நிலையம் ஒன்று கட்டப்பட்டதாகவும். ஆனால் தற்போது அந்த பேருந்து நிலையம் பாழடைந்து, இடிந்து விழக்கூடிய நிலையில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக பேசிய கூத்தாநல்லூர் பகுதி மக்கள்  “இந்த கூத்தாநல்லூர் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால், எங்கள் கூத்தாநல்லூர் பகுதிக்கு பேருந்து நிலையம் இருக்கிறது ஆனால் அது மிகவும் பாழடைந்த நிலையில் இருக்கிறது. சுமார் 24 வருடங்களுக்கு முன்பு இரண்டு ஏக்கர் மதிப்பில் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. ஆனால் அரசு அதை சரியாக பராமரிக்காத காரணத்தினால் அது தற்போது பழுதடைந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதி மக்களாகிய நாங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றோம்.

வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், இங்கிருந்து மன்னார்குடி சென்றோ அல்லது திருவாரூர் சென்றோ தான் பேருந்து ஏறக்கூடிய அவல நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். பேருந்து நிலையம் இல்லாததால் எங்கள் கூத்தாநல்லூர் பகுதியில் படிக்கக்கூடிய மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு சென்று வர மிகவும் சிரமப்படுகிறார்கள்.

கர்ப்பிணிபெண்கள், வயதான பெரியவர்கள் என அனைவருக்கும் பேருந்து நிலையம் இல்லாதது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.  உடனடியாக தமிழக அரசாங்கம் இந்த பழைய பேருந்து நிலையத்தை முழுமையாக இடித்துவிட்டு இதே கூத்தாநல்லூர் பகுதியில் எங்களுக்கு பேருந்து நிலையத்தை கட்டித் தர வேண்டும் என்றனர்.

செய்தியாளர்: சுர்ஜித் ( திருவாரூர்)

First published:

Tags: Local News, Tamil News, Thiruvarur