ஹோம் /திருவாரூர் /

மாண்டஸ் புயல் வருது.. திருவாரூர் மீனவர்களே நாளை யாரும் கடலுக்கு செல்லாதீங்க!

மாண்டஸ் புயல் வருது.. திருவாரூர் மீனவர்களே நாளை யாரும் கடலுக்கு செல்லாதீங்க!

புயல் எச்சரிக்கை

புயல் எச்சரிக்கை

திருவாரூர் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvarur | Thiruvarur

திருவாரூர் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறும். இதனால், நாளை மாலை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை நிலை குறித்து சென்னை தலைமை செயலகத்தில், தலைமை செயலாளர் இறையன்பு உடன் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று வீசலாம்.

பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து நாளை (வியாழக்கிழமை) மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசலாம். கடலுக்கு செல்ல வேண்டாம் இதேபோல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து இன்றும், நாளையும் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசலாம்.

அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். எனவே திருவாரூர் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) ஜெயராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

First published:

Tags: Cyclone Mandous, Heavy rain, Local News, Thiruvarur