ஹோம் /திருவாரூர் /

Thiruvarur | யூரியாவுக்கு பதில் மீன் அமிலம் - இயற்கை உரம் குறித்து விவரிக்கும் விவசாயி

Thiruvarur | யூரியாவுக்கு பதில் மீன் அமிலம் - இயற்கை உரம் குறித்து விவரிக்கும் விவசாயி

தஞ்சை விவசாயி

தஞ்சை விவசாயி

திருவாரூரில் பயிர்களுக்கு யூரியாவுக்கு பதிலாக இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரத்தை பயன்படுத்தி சாதிக்கிறார் இயற்கை விவசாயி.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Thiruvarur, India

  திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சம்பா, தாளடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறன. பெரும்பாலான விவசாயிகள் நேரடி விதைப்பிலும் ஒரு சில விவசாயிகள் நாற்றங்காலில் இருந்து நாற்றுகளைப் பறித்து நடவு பணிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் உரத்தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

  பயிர்கள் பச்சையாக இருப்பதற்கும், நைட்ரஜன் தேவைக்கு முக்கியமாக கருதப்படுவது யூரியா உரமாகும். பயிரிடப்பட்ட சில நாட்களிலேயே, அடி உரமான யூரியா, பயிர்களுக்கு தெளிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் யூரியா, பொட்டாஸ், டி.ஏ.பி போன்ற உரங்கள் மிகவும் தட்டுப்பாடாக உள்ளது.

  தஞ்சை விவசாயி செந்தில் குமார்

  செயற்கை உரங்கள் ஆக்கிரமித்த விவசாய பூமியை காக்க இந்த உரத்தட்டுப்பாட்டை பயன்படுத்தி இயற்கை உரங்களை மீண்டும் விவசாயிகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற முயற்சியோடு இயற்கை உரங்களை தேடி ஒரு பயணத்தை மேற்கொண்டோம்.

  திருவாரூர் மாவட்டத்தில் 6 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை முறையில் விவசாயம் செய்து வரும் செந்தில்குமாரைச் சந்தித்தோம். அவரிடம் இயற்கை உரங்கள் குறித்து விரிவாக கேட்டோம், “உணவுக்குப் பயன்படாத மீன் கழிவுககளை கடையிலிருந்து வாங்கி வந்து, அதனுடன் சமபங்கு அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும். இந்தக் கலவையை காற்று போகாதவாறு ஒரு பிளாஸ்டிக் டப்பாவிலோ அல்லது வாளியிலோ 40 நாட்கள் வைக்க வேண்டும்.

  நாற்பது நாட்கள் கழித்து திறந்து பார்த்தால், தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும். இந்த திரவத்திலிருந்து எந்த ஒரு கெட்ட வாடையும் வீசாது. பழவாடை மட்டுமே வீசும். இப்படி பழவாடை வீசினால் இயற்கை உரமான மீன் அமினோ அமிலம் தயார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

  இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் மேல் அடித்து வர யூரியாக்கு இணையான அடி சத்து பயிர்களுக்கு கிடைத்து, விளைச்சல் அதிகரிக்கும்.

  மேலும் மழைக்காலங்களில் இயற்கையாகவே பயிர்களுக்கு நைட்ரஜன் அதிகமாக கிடைப்பதால் இந்த மீன் அமினோ அமிலத்தை குறைந்த அளவு மட்டுமே பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டும். அதிகளவு பயன்படுத்தினால் பயிரானது கருகக் கூடிய நிலை ஏற்படும். எனவே குறைந்த அளவே இந்த மீன் அமில அமிலத்தை பயிர்களுக்கு உபயோகிக்க வேண்டும் என்றார்.

  இதே போன்று மற்ற செயற்கை உரங்களுக்கு மாற்றாக அதிக வீரியத்துடன் செயல்படும் இயற்கை உரங்களும் இருக்கின்றன. இதை பயன்படுத்தி சம்பா மற்றும் தாளடி பயிர்களை விவசாயிகள் பயிர் செய்ய முடியும். யாரையும் நம்பி விவசாயி இல்லை. விவசாயியை நம்பி தான் உலகம் இயங்குகிறது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்’ என்று நம்பிக்கையோடு பேசி முடித்தார் இயற்கை விவசாயி செந்தில்குமார்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Agriculture, Local News, Tiruvarur