முகப்பு /திருவாரூர் /

திருவாரூரில் நீச்சல் பயிற்சி வகுப்புகள்.. குதூகலத்தில் குட்டீஸ்கள்..

திருவாரூரில் நீச்சல் பயிற்சி வகுப்புகள்.. குதூகலத்தில் குட்டீஸ்கள்..

X
திருவாரூரில்

திருவாரூரில் நீச்சல் பயிற்சி வகுப்புகள்

Swimming Training Class : திருவாரூர் மாவட்டத்தில் முதல்முறையாக இந்த ஆண்டிலிருந்து கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பானது தொடங்கி நடைபெற்று வருகிறது.

  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதில் அதிக அளவிலான பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை நீச்சல் பயிற்சி பெற்று கொள்வதற்காக வகுப்பில் சேர்த்துள்ளனர் .50க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்போது நீச்சல் பயிற்சி பெற்று வருகின்றன. இதில் 1180 ரூபாய் கட்டணத்தில் கோடை கால பயிற்சி வகுப்பானது 12 நாளைக்கு நடத்தப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் நீச்சல் குளத்தினை பயன்படுத்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 60 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. மாதாந்திர நீச்சல் குளம் பயன்படுத்த கட்டணமானது 750 ரூபாயும் ஆண்டு ஒன்றுக்கு 3500 ரூபாயும் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. தற்போது கோடைகால பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்று வருவதாக மாணவர்களின் பெற்றோர் கூறியுள்ளனர்.

கோடைகால பயிற்சி வகுப்பு குறித்து மாணவரின் பெற்றோர் குமரன் கூறுகையில், “மாணவர்கள் பெரும்பாலும் கோடைகால விடுமுறைகள் இருப்பதால் 12 நாட்கள் நடைபெறும் பயிற்சி வகுப்பினை 20 நாட்களுக்கு நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் நீச்சல் குளத்தின் அடிப்படை வசதிகள் சரிவர அமைக்கப்படவில்லை என பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருவாரூரில் நீச்சல் பயிற்சி வகுப்புகள்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

குளியல் அறை, உடைமாற்றும் அறைகளில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக பெற்றோர் கூறியுள்ளனர் கோடைகால பயிற்சி வகுப்பை பொறுத்தவரையில் வகுப்பு சிறப்பாக நடைபெறுகிறது அடிப்படை வசதிகள் மட்டும் மேலும் சீரமைக்கப்பட வேண்டிய அவசியத்தில் உள்ளது” என கூறினார்.

First published:

Tags: Local News, Tiruvarur